என்னவென்று சொல்வது?

முகநூலில் எப்போதாவது  ஐந்து நிமிடம் மேய்வது வழக்கம்.  அப்போது பின்வரும் குறிப்பைப் படித்த போது நான் எழுதியதை யாரோ எடுத்து மேற்கோள் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்.  ஆனால் தொடர்ந்து படித்த போது இல்லையே, இப்படி எங்கே எழுதினோம், ஆனால் நாம் எழுதிய மாதிரியே இருக்கிறதே என்று நினைத்தேன்.  பிறகுதான் லீனா மணிமேகலை என்று தெரிந்தது.  நானும் முன்பெல்லாம் இப்படி விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  பிறகு அது தேவையில்லை என்று தோன்றி விட்டது.  லீனா எழுதிய குறிப்பு கீழே: … Read more

ஈரோடு புத்தகக் கண்காட்சி

ஈரோடு புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தககங்கள் கிழக்கு (அரங்கு எண் – 93, 94) மற்றும் உயிர்மை (அரங்கு எண் – 42, 43) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: VOC Park,  ஈரோடு பேருந்து நிலையம் அருகில். – ஸ்ரீராம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தொடர்பாக…

பொதுவாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவதில்லை.  காரணம், நமக்கு ஹலோ சொல்வதற்குக் கூட தகுதி இல்லாத மொண்ணைகளோடு நாம் சரிக்கு சரியாக விவாதிப்பது பன்றிகளோடு மல்யுத்தம் செய்வதற்குச் சமம்.  இருந்தாலும் கலந்து கொள்வதற்குக் காரணம், நம்முடைய கருத்து லட்சக் கணக்கான பேரைச் சென்றடைய ஒரு வாய்ப்பு இருக்கிறதே என்பதுதான்.  புகழ் ஆசை கிடையாது.  எனக்குப் புகழ் பிடிக்காது.  புகழால் ஒரு காப்பி கூட இலவசமாகக் கிடைக்காது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாததன் இன்னொரு … Read more

ஈஷா சர்ச்சை

இன்று இரவு 9 மணிக்கு ந்யூஸ் 7 தொலைக்காட்சியில் ஈஷா சர்ச்சை குறித்த ‘கேள்வி நேரம்’ நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா கலந்துகொள்கிறார். நண்பர்கள் பார்க்கவும். – ஸ்ரீராம்