இப்போதைக்கு வசதிக்காகத்தான் எக்ஸைல் 2 என்ற பெயர். இன்னும் நாவலுக்குத் தலைப்பு வைக்கவில்லை. பல ஆண்டுகளாக மனுஷ்ய புத்திரன் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார், என்னுடைய நாகூர் வாழ்க்கையை எழுதச் சொல்லி. எக்ஸிஸ்டென்ஷியலிஸம் நாவலில் வந்ததெல்லாம் சும்மா இணுக்கு. அதேபோல் திர்லோக்புரி தவிர என்னுடைய பனிரண்டு ஆண்டுக் கால தில்லி வாழ்க்கையையும் நான் எழுதியதில்லை. இந்த இரண்டும் எக்ஸைல் 2-இல் உள்ளது என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். நாவலை எடிட் பண்ணுவதற்காக இரண்டு பேரிடம் கொடுக்க வேண்டும் என்று ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். 1300 பக்கங்கள் என்பதால் சிரமமாக உள்ளது. மேலும், இதை நான் ஆங்கில வாசகர்களுக்காக எழுதியதால் பல இடங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. அதையும் தமிழில் கொண்டு வர வேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் தருணை சந்திக்க கோவா செல்கிறேன். அதற்குள் இந்த வேலையை முடித்துக் கொடுத்து விட வேண்டும். தருண் மீதான குற்றச்சாட்டு வெறும் சதிவேலை என்று தெரிந்து விட்டது. மிக விரைவில் இந்த விபரம் வெளியே வரும்.
Comments are closed.