மாயமான் வேட்டை: ஒரு ரகளை கடிதம்

சாரு எல்லாம் (மொதல்ல, “சாரு போன்ற எழுத்தாளர்கள் எல்லாம்”ன்னுதான் ஆரம்பிச்சேன்) எதை வேணாலும் எழுதலாம். எல்லாமே வாசிக்குறதுக்கு சுகம்தான். ஒருத்தனுக்கு நாக்குல சூலத்தால குத்தியிருக்கான்னா, இவருக்கு வெரல்ல முத்தம் குடுத்துருக்கா. மா.வே ஒரு கதையே இல்ல, அது ஒரு வாழ்வியல் அனுபவத்தின் நீட்சி. சிம்ப்ளி, எ லைஃப் சைஸ் போர்ட்ரெய்ட்.  நமக்கு ‘புனைவு’ங்குறது, நம்பவே முடியாதபடி மிகைப்படுத்தப்பட்டதா இருக்கணும். அதுல நாம எப்பிடியாச்சும் அடிச்சிபிடிச்சி உள்ள நொழஞ்சி ‘சூப்பர் ஹீரோ’ வேசமோ, இல்ல சைடு ஆக்டிங்கோ குடுத்து சுயஇன்பம் அடையமுடியும். சாரு எதார்த்தமா எழுதுறாரு, அதனால நம்ம கற்பனைகளின் சாத்தியங்கள ‘கட்’ பண்ணிடுறாரு. இப்ப, ஒரு கமர்சியல் சினிமா இருக்கு, யதார்த்த சினிமா இருக்கு (மேலும் பல இருக்கு). நமக்கு ஏன், ஒருத்தன் 20 பேர அடிக்கிற,  கமர்சியல் சினிமா பிடிக்கிற அளவுக்கு மத்த சினிமா பிடிக்கல? நாம நம்மள ஹீரோவா அடையாளப்படுத்திக்க விரும்புறோம். அதுவும் எப்பிடி, யாராலயும் முடியாத காரியங்கள நாம  செய்யக்கூடும்-ங்குற நம்பிக்கைய நமக்கு நாமே தந்துக்கிட்டு. சாரு அதுக்கு வாய்ப்பு தர்றது இல்ல. அப்ப, அவரு என்ன சொல்லவாறாருன்னு புரிஞ்சிக்காம, அவரு சும்மா புழுகிக்கிட்டு அலையிறாருன்னுதான நாம சொல்லுவோம். ஏய்யா, நாம யாராச்சும் கும்பி காயும்போது கூல்டிரிங்ஸ் குடிப்பமா? அவர் செய்வாரு, அவர் கதைகள்ல வர்ற கேரக்டர் செய்யும். அதுதான் ஹெடோனிஸம். நமக்கு வாழ்நாள்ல வாய்ப்பே இல்லன்னு தெரிஞ்சிருந்தாலும், ஒரு த்ரீஸம் கதைய நம்மால ஃபேன்டஸைஸ் பண்ணி பாக்கமுடியும், ஆனா, அவர் சொல்லுற ஹெடோனிஸம் பக்கத்துலகூட போகமுடியாது. 

இப்ப, கதைக்கி வருவோம். இதுக்கு மாயமான் வேட்டைன்னு தலைப்பு வச்சிருக்காரு. கதையின் ஹீரோ அப்பிடி எதுவும் வெளிப்படையா வேட்டையாடுற மாதிரி தெரியல (வேட்டைங்குறதே அருவமில்லாம செய்றதுதான). ஆனா, வாசிக்கிறவன் பிரதியில தனக்கான வேட்டைய நடத்திக்கிட்டேதான் இருக்குறான். அதுக்கு தேவையான தீனி கெடக்கலன்னா (அட்லீஸ்ட், அடர்த்தியான மொழி), மிஞ்சுறது வருத்தந்தான். இவரு இதே கதைய, அடர்த்தியான மொழியிலோ, இல்ல சீலே/மெஹிகோ-வுக்கு பதிலா ஆந்திரா/கேரளா-ன்னோ எழுதியிருந்தா, நமக்கு கொஞ்சம்  வேட்டையாட தோதா இருந்துருக்கும். சரி, நாம ஒரு டூர் போனா என்ன செய்வோம்? ஒரு நிமிசம் விடாம டைம் டைபிள் போட்டு, போன எடத்துல இருக்குற எல்லா ஸ்பாட்டுக்கும் விஸிட் அடிச்சி, அங்கங்க ஓரமா நின்னு  ஸெல்ஃபி எடுத்துக்கிட்டு, நைட் லேட்டா ரூமுக்கு திரும்பி, அவசர அவசரமா நாலு பெக் போட்டுட்டு, மறக்காம அடுத்தநாளு காலை 7 மணிக்கு அலாரம் வச்சி எந்திரிச்சி, கூட வந்தவங்க 10 நிமிசம் லேட்டா எந்திரிச்சாங்கன்னா அவங்கமேல சிடுசிடுத்துக்கிட்டு, மறுபடியும் சிரிச்ச மொகத்தோட ஸெல்ஃபி எடுக்க ஓடுவோம். ஆனா, இதுல ஹீரோ என்ன செய்யிறான்(ரு). ரிலாக்ஸ்டா, புரியாத தேசத்துல, புரியாத மொழியில போடுற நாடகத்தப் பாக்கப் போறான். நமக்கு அது ஒட்டுமா?  நான் பாத்ததுல, கேள்விப்பட்டதுல இருந்து சொல்றேன், இதுல வர்ற லத்தின்-அமெரிக்க பாத்திரங்கள் அவ்வளவு எதார்த்தம். ஓக்தாவியோ பாஸ்(ஜ்), இந்தியாவுக்கும் மெஹிகோவுக்கும் எப்பிடி பாலம் போட முயற்சி செஞ்சாரோ அதையேதான் சாருவும் செய்யிறாரு. நமக்கு அவரோட கதை புரியனும்னா மொதல்ல அவரோட ஃபிலாஸஃபி புரியணும். அவரோட கதைகள கொண்டாடுறதுக்கு நாம ஒரு ஹெடோனிஸ்டா இருக்கணுங்கிறது அவசியமில்ல. ஆனா, அட்லீஸ்ட், ஹெடோனிஸம்னா என்னன்னு தெரிஞ்சிருக்கணும். ஒன்னு மட்டும் எனக்கு புரிய மாட்டிக்கி.  இருக்குறதுலயே புரியிறதுக்குக் கஷ்டமான லௌகீக, பொருளாதார, அரசியல் மேட்டர்ல எல்லாம் தேடித்தேடி விசயங்கள சேகரிச்சி, எந்த கம்பனி ஸ்டாக் எப்பிடி போகும், எங்க ரியல் எஸ்டேட் ஹாட்டு, யாருக்கு ஓட்டு போட்டா உருப்படுவோம்னு எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்குற நமக்கு, எப்பிடி சந்தோசமா வாழலாம்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம் கூட இல்லங்குறது பெரிய ஆச்சரியம்தான். அதுவும் இப்பிடி கேக்கையும் கட் பண்ணி, ஊட்டியும் விடுறதுக்கு ஆள் இருக்கும்போதும் கூட. ஷுட் ஹீ கட் த கேக் அன்ட் ஈட் இட் டூ ஃபார் யூ?

பார்த்தா