அ-காலம்

அநேகமாக என் எழுத்து வாழ்வில் ஏப்ரல் 2021 என்ற இந்த மாதம்தான் அதிகம் எழுதியிருப்பேன், அதிகம் படித்திருப்பேன்.  பக்கங்களில் கணக்கில் கம்மியாகத்தான் வரும்.  Bynge.in இல் எழுதி வரும் அ-காலம் தொடருக்காகத்தான் அப்படிப் படித்தேன், எழுதினேன்.  ஒரு கட்டுரை 1200 வார்த்தை.  ஐந்து பக்கம்.  இதை எழுத எனக்கு இரண்டு நாட்கள் எடுக்கும்.  நிறைய படிக்க வேண்டும். சில சமயங்களில் முழு நாவலையே படிக்க வேண்டும்.  பிறகு அதைப் பற்றி அஞ்சு பக்கம் எழுத வேண்டும்.  இப்படி ஏப்ரல் 13-ஆம் தேதி பதின்மூன்றாவது கட்டுரையை அனுப்பிய நான் இன்று 27-ஆவது அத்தியாயத்தை அனுப்பி விட்டேன்.  என்னைப் பொறுத்தவரை தொடர் முடிந்தது. 

உங்களுக்கு பிஞ்ஜ் செயலியில் இதுவரை பத்து அத்தியாயம் வந்துள்ளது.  இன்னும் 17 பாக்கி.  இன்னும் ரெண்டு மாதங்களில் தொடர் முடியும்.  இந்த ரெண்டு மாதங்களில் ஒரு நாவலில் பாதியையாவது முடிக்க வேண்டும்.  அது என்ன என்று பிஞ்ஜில்தான் அடுத்த மாதம் வெளியிடுவார்கள்.  ஒரு அதிரடி நாவல்.  நீங்கள் சற்றும் யூகிக்க முடியாதது.  தியாகராஜா அல்ல.  அதைத் தொடராக எல்லாம் எழுத முடியாது.  மே முழுவதும் ராப்பகலாகப் படிக்க வேண்டும்.  ஆய்வு செய்யாமல் அந்த நாவலை எழுத முடியாது.  இன்று ஒரு மணி நேரம் நெட்ஃப்ளிக்ஸில் எதையாவது மேய்ந்து விட்டு இரவிலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும்.  ப்ளாகில் அவ்வப்போது எழுதுவேன்.  அ-காலம் படியுங்கள்.  என் அ-புனைவு எழுத்தில் எனக்கு ஆகப் பிடித்தது அ-காலம்தான்.  நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.