சுவாரசியம்

என் வாழ்க்கையை இது போன்ற கடிதங்கள்தான் மேலும் சுவாரசியமாக்குகின்றன.  நீங்களும் படித்து இன்புறுங்கள்.   சல்மான் ருஷ்டி, வி.எஸ். நைப்பால் போன்றவர்களை விடவும் மாபெரும் இலக்கிய சாதனை புரிந்தவர் தருண் தேஜ்பால்.  தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகிய இருவருக்கும் நிகரானவர்.  அவரை இந்தியர்கள் ரேப்பிஸ்ட் என அடையாளம் காண்கிறார்கள்.  எனவே நான் கிசுகிசு எழுத்தாளன் எனவும், இன்னும் பிறவாகவும் அடையாளம் காணப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  படித்தவனே படிக்காத அறிவிலியை விட மூடனாக இருக்கிறான் என்பதற்கு இதெல்லாம் சான்று. எப்படி இருந்தாலும் மகாபலிக்கு நன்றி,  என் குடும்பத்துப் பெண்களையும் இழுத்துத் திட்டாமல் இருந்ததற்கு.   மற்றபடி வசை கடிதம் எழுத முகவரி: charu.nivedita.india@gmail.com

திரு சாருநிவேதிதா அவர்களுக்கு,

தங்களது வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். ோணல் பக்கங்களை (விகடன்-இணையதளத்தில்), இலவசமாக இருந்தபொழுது படித்தேன். ிறகு உங்களின் வலைதளத்தில் தொடர்ந்தேன். உங்களது புத்தகங்களில் சீரோ டெகிரியை மட்டும், பழைய புத்தகக்கடையில் 30 ரூபாய் கொடுத்து வாங்கி படித்தேன். பத்து பக்கங்கள் தாண்டுவதற்குள் பைத்தியமாகிவிடுவேனோ என பயந்து குப்பைத்தொட்டியில் தூர எறிந்துவிட்டேன். ராசலீலவைக்கூட நான் நெட்டில்தான் வாசித்தேன். அது அடுத்தவங்க டைரியை படிப்பதுபோல் நன்றாகவும், டைம்-பாசிங்காகவுமிருந்ததால் கொஞ்சம் பொழுது போனது. அதுபோக, உங்களை நான் கண்டடைந்ததே, நண்பர் ஒருவர், மச்சான், இவர்தான் மச்சி அந்த கிசுகிசு பகுதியில் ‘டயமண்ட்’ கவிஞர், தேள்கடி நடிகைன்னெல்லாம் எழுதற ஆளுன்னான். அன்னிலேருந்து நீங்க எழுதற எல்லாத்தையும் வாசிக்க ஆரம்பித்தேன். ஜெயமோகன் அவர்கள் எழுதும் சிறிய கட்டுரைகளையும், சில பகடியும் மட்டுமே வாசிப்பேன். ஆனால் எழுத்தாளறேன்ற தலிக்கணம் இருந்தாலும், இலக்கியவாதிக்கான இலக்கணத்துடன் இருக்கின்ற அவரைப்பார்த்தும் உங்களைப்போன்றவர்கள் திருந்தவேண்டும். ஒவ்வொரு பயணமும் ஒரு ஆராய்ச்சிக்குப்பிறகே தொடராகி, புத்தகமாகின்றது.அதன் சேல்ஸ் பற்றியும், வாசகர்களையும் அவர் சினந்து நான் பார்த்ததில்லை. எனக்கு அவரையும் உங்களையும் பார்த்தால் மலைக்கும், மடுவுக்குமான வேறுபாடு உங்களுக்கு புரியவில்லையா. ஒரு யாகம்பொல தினமும் பாரதத்தை எழுதிக்கொண்டிருக்கிறார் என்றால் எவ்வளவு வாசிப்பு தேவைப்படும், உழைப்பு தேவைப்படும். அவ்வளவு பெரிய பத்தியை ஒவ்வொரு நாளும் பதிவேற்றுவது மாத்திரம் கூட சிலரால் இயலாத காரியம். உண்மையான உழைப்பாளி/படிப்பாளி/ஞானஸ்தன்/

ஒழுக்கவாதி/பண்பாளன் ஆகிய அந்த இலக்கியவாதியை மதிக்கிறேன். வெற்றர்கலை/வேடிக்கயாளர்களை/வேச்டர்களை வாசகர்களாய் நினைத்துக்கொண்டு ஒரு வாரப்பத்திரிக்கையில் பெரிதாக விளம்பிநீர்கள். உண்மையிலேயே நீங்களொரு இலக்கியவாதியென சொல்லிக்கொள்ள வெட்க்கமாகயில்லயா. அது ரவிகுமாராகட்டும், வேறு மனுஷ்யபுதிரனாகட்டும், தினமும் உழைத்துக்கொண்டேயிருக்கிரார்கள். ஸ்ராவை எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு வாசிப்பிருந்தால் எந்தவொரு மேடையாகட்டும், ரஷ்ஷிய கலாச்சார மையட்திலாகட்டும். நீங்களெல்லாம் இலக்கிய வாசகரென்றுகூட சொல்லாதீர்கள்.

உண்மையான ஒருஇலக்கியவாதியை மதிக்கும் விதமாய்: இனி ஒவ்வொரு வாரமும், ஒரு புத்தகமாவது வாங்கி படிக்கவேண்டும். ெயமொஹனுக்கான மரியாதை: வெண்முரசு 35 பாகத்தையும் படித்துவிட்டு, தொடர்ந்து எந்த வேலையிருப்பினும் தினமும் படிட்துவிடுவதென முடிவுசெய்துள்ளேன்.

PS: I should not and Iam not commenting about your financial statements, since that is very much personal. I do comment here about your over rated literature status and over hauled statements.

அன்புடன்,

மகாபலி.

Comments are closed.