அவதூருக்கு எதிர்வினை (2): ரிஷி

ரிஷி:

எனக்கு இது வரைக்கும் புரியாத புதிர் என்னான்னா, இலக்கியம் படிச்சும் எரும மாடு மாதிரி எப்டி திரிய முடியும்ங்கிறதுதான்!! இப்டி கூச்ச நாச்சமே இல்லாம போஸ்ட் போட்றது, அந்த பக்கம் இணைய இதழ் நடத்திக்கிட்டு எலக்கியம் வேற!! இன்னும் எத்தன காலத்துக்குதா இப்டி அதர பழைய குற்றச்சாட்டப் போடுவீங்க சாருவுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லேன்னு!? இத கேட்டுக் கேட்டு புளிச்சு போச்சு. யார்ரா நீங்கலாம்!!!! எனக்கு ஒரு கேள்வி. சினிமாவுல நடக்காத தில்லாலங்கடி வேலையா? என்னோட நண்பர்களாம் சினிமாவுலதா வேல பாக்குறாங்க. கத கதயா பேசுவோம். ஆஹ , சினிமானா கோடி கோடியா கொடுத்து இஷ்டத்துக்கு கூத்தடிக்க விடுவீங்க. இந்த பக்கம் எழுத்தாளன அடிக்கிறது. இலக்கியவாதின ஏளனம் பண்றது. அதுவும் ஏளனம் பண்ற லூசும் இலக்கிய வட்டத்துக்குள்ளதா இருக்கு. இது எப்டி தெரியுமா, மல்லாக்க படுத்து எச்சி துப்பிக்கிறது. நல்லா துப்பிக்கோ. யாருக்கு நட்டம்! என்னங்கடா விளையாடுறீங்க. என்னத்ததான் எலக்கியத்துல படிக்கிறீங்க!?மிஷ்கினின் அசிஸ்டன்ட் சொன்னது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது. அதலாம் பத்தி நமக்கு என்ன கவல அடிக்க ஒரு சான்ஸ் கிடைக்குதா. அப்பறம் இந்த பிசாசுல வர அந்த “ஹண்ட்ரட் பக்ஸ் இருக்கா ப்ரோ” கேரக்ட்டர் படு அமெச்சூர். படமே படு அமெச்சூர்த்தான. நம்ம இன்னாதா கொரோசோவா கொரோசோவானு கூவுனாலும், கொரோசோவா கிட்ட கூட நெருங்க முடியாம போறதுக்கு இதான் காரணம். கொரோசோவா கல்லறைக்கு போய் செவென் சாமுராய் பீஜியம் போடச் சொல்லி சாகே குடிச்சு கொரோசோவாவ கட்டி புடிச்சு அழுதேனு சொல்லி பீத்திக்கலாம். கொரோசோவாவுக்கு சாகே இங்க இலக்கியவாதிகளோட மூஞ்சில சேத்த வாரிஅடிக்கிறது!! அதுனாலதா கொரோசோவவா ஆக முடியாது. கல்லறையில போய் வேண்ணா கட்டிப் புடிச்சுஅழுதுட்டு வரலாம். கருப்பு கண்ணாடி போட்டு துப்பறிவாளன் மாதிரி படம் எடுத்து ஊர ஏமாத்தலாம். ஆனா, கொரோசோவாவ ஆக முடியாது.