அவதூறுக்கு எதிர்வினை (11): வாஸ்தோ

விளம்பரப் பிரியை அல்லது பிரபல்ய பிம்பம் கொடுக்கும் போதை அல்லது நான் மிகவும் மேம்பட்டவனெனக் ‘காட்டி’க் கொள்ள முற்படுதல் அல்லது நான் மிகவும் தைரியமானவன் என நிறுவ நினைத்தல் எனப் பல காரணிகள் ஒன்றினைகையில் அல்லது இதில் ஏதேனுமொன்றுத் தலைத் தூக்கிப் பார்க்கையில் தன் எதிரில் இருப்பவர் யார்..? அவருடைய சாதனைகள் என்ன என்பதெல்லாம் பார்க்கத் தோன்றாது. உடனடியாக அவர்களைத் தாக்கி எழுத வைத்துவிடும். ஜெமோவைப் புளிச்ச மாவு என்று நக்கலடிப்பதில் துவங்கி இன்று சாருவைத் திருடனென்றும் காறி உமிழ்கிறேன் என்று சொல்வது வரையிலும் வந்து நிற்கிறது. இப்படிப் பேசித் திரிபவர்களுக்கு ஒன்று மட்டும் புரிவதில்லை. நாளையே இந்த ஐடி காணாமல் போய்விட்டதெனில், உன் அடையாளமே தொலைந்துவிடும். ஆனால் அவர்கள் நிலை அப்படியானதல்ல.

அவர்களைத் தூற்றும் இவர்கள் இறந்து, இவர்களைப் புதைத்த இடத்தில் புல் அல்ல புளியமரமே முளைத்தப் பிறகும் கூட அவர்களின் பெயர் தமிழ் இலக்கியத்தில் என்றுமே நிலைத்திருக்கும். அதனால இந்த லைக் கமெண்ட் நான் பெரியாளு தெரியுமா பீத்தலை எல்லாம் கொஞ்சம் அடக்கிக்கோங்க தம்பிகளா.