ஒரு அனுபவம்

அன்புள்ள சாருவுக்கு ,
சில நிமிடங்களுக்கு முன்பே தங்களது ஸீரோ டிகிரி படித்து முடித்தேன். கடந்த சில நாட்களாக, இந்தப் புத்தகத்தைப்  படிக்க ஆரம்பித்ததில் இருந்தே மனம் ஒரு பள்ளத்தாக்கின் மேலிருந்து கீழாக  பிரயாணிப்பது போல ஒரு பரவச உணர்வு. ஓரளவுக்கு தீவிர இலக்கியம் படிக்கும் வாசகன் நான்.  ஸீரோ டிகிரி தமிழ்  இலக்கிய வரிசையில் ஆகச் சிறந்த உன்னதப் படைப்பு என்பதை எந்த மிகையும் இன்றி சொல்லலாம். ஒரு வாசகனை இவ்வளவு பரவச மனோ நிலைக்கு ஒரு புத்தகம் இட்டுச் செல்ல முடியுமா? What an euphoric journey!

 

 சூர்யா அல்லது முனியாண்டி அல்லது வாசகனின் மொழிபெயர்ப்பு குரு கோட்டிக்குப்பன்  எவ்வளவோ பேருக்கு குருவாக இருந்திருப்பான்.
அத்தியாயம் 7 அபாரம். குறிப்பாக “கண்காணாத தீவில் யாருமறியாத புராதன கோட்டையை காவல் காப்பதற்காக அனுப்பி வைக்கப்படும்  போர் வீரன் மனச்சிதைவுக்கு ஆளாகிறான்” படைப்பின் உச்சம்.

 

மாய்த்தா பெயர் குறித்த கிண்டல் செம.
அத்தியாயம் 31. குறைந்தது 10  முறை படித்திருப்பேன்.
பக்கம் 223 – “அதிகாரமும் எதிர்பார்ப்புகளும் நிபந்தனைகளும் அற்ற எளிமையான இயல்பான அன்பும் மனித உறவுகளும் இன்று சாத்தியமே இல்லை”. இதைப்படித்த போது நிஜமாகவே நான் அழுதிருந்ததை கண்டேன்.

 

தமிழில் கொண்டாடியிருக்கப்பட வேண்டிய புத்தகம். The irony is that, I guess, zero degree’s English readers outnumber/will outnumber the tamil readers. I say this because I have noticed many a times that non-tamilians read more than we do(I frequently witness this in my train journeys, if you take an intra-state journey u would find our people killing the time with i pod, where inter-state travel would give you the picture of readers).

 

 உங்களை அடுத்த முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால்(இப்போது என் வசம் இருக்கும் ஸீரோ டிகிரி நீங்கள் autograph இட்டு கொடுத்தது) உங்கள் கைகளில் முத்தமிட ஆசை!
ராமசாமி

Comments are closed.