அன்புள்ள சாருவுக்கு,
உங்கள் புத்தகங்களின் முன்னால் தீவிர வாசகி நான். உங்களின் ராஸ லீலாவையும், எக்ஸைலையும் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன். இதைப் பற்றி என் நண்பனிடம் சமிபத்தில் சொன்னேன். உடனே அவன் ஜெயமோகனின் ஊமைச்செந்நாய் சிறுகதையும், காடு நாவலையும் என்னிடம் கூடுத்துப் படிக்கச் சொன்னான். படித்துவிட்டு எற்பட்ட மன அதிர்ச்சியில் இருந்து மீளவே எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது. சிறிது நாட்கள் கழித்து உங்கள் ராஸ லீலாவையும் , எக்ஸைலையும் கிழே போட்டு அதன் மேல் சிறுநீர் கழித்துவிட்டேன். வேறு எதுவும் செய்ய தோனவில்லை. ஏன்னென்றால், நீங்கள் எழுதியிருப்பது வெறும் டெக்ஸ்ட். ஆனால் ஜெயமோனின் நாவலும் சிறுகதையும் கிளாஸிக். இந்த இரண்டையும் நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். தயவு செய்து விருப்பு வெறுப்பு அற்று அதைப் படித்துப் பாருங்கள். உங்கள் மனதை அது நிச்சயம் மாற்றி விடும். பவா செல்லதுரை ஒரு மேடையில் ஊமைச்செந்நாய் சிறுகதையை முழுதாக சொல்லி, இந்த ஒரு சிறுகதை எழுதியதற்காக மட்டும் ஜெயமோகனுக்கு நோபல் பரிசு தரலாம் என்று சொன்னார்.
ஊமைச் செந்நாய்யை பாராட்டி எத்தனை இலக்கிய ஆளுமைகள் இனையத்தில் எழுதியிருக்கிறார்கள் என்ற பார்த்து அதிர்ந்துவிட்டேன். சரி, ராஸலீலாவை எத்தனைப்பேர் பாராட்டியிருக்கிறார்கள் என்று இனையத்தில் தேடினேன். ஒருவர் மட்டும் ”இதுப் போல் உலக இலக்கியத்தில் யாரும் எழுதியதில்லை” என்று பாராட்டியிருக்கிறார். அவர் பெயர் சாரு நிவேதிதா. இப்போது புரிகிறதா உங்களுக்கு?. ஒருவர் தான் படைத்ததை தானே பாராட்டிக் கொள்வது ஒருவித மன நோயாம் அதையும் இனையத்தில் தேடி கண்டுபிடித்தேன். கவலைப் படாதீர்கள், இதை எளிதில் குணப்படுத்தி விடலாம். ஒரு மாதம் கவுன்ஸிலிங் மட்டும் போக வேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகளாக உங்கள் நாவலை பலவேறு மொழிகளில் மொழிபெயர்த்துக் கொண்டுயிருப்பதாக அவ்வப்போது வெளிவரும் அறிவிப்புகளை பார்த்து தெரிந்துக் கொண்டேன். மொழிபெயர்ப்பு என்ற உங்கள் தங்க முட்டையிடும் வாத்தை தயவு செய்து சிறிது நேரம் வேறு எங்காவுது மேய விட்டுவிட்டு ஊமைச்செந்நாய் சிறுகதையை படித்துப் பாருங்கள்.
நன்றி,
ஜானகி
janakitrichy82@gmail.com
இது போல் எனக்கு தினமும் சுமார் ஐந்து கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி கடிதம் எழுதுபவர்களின் ஒரே நோக்கம், ஆதங்கம், பதற்றமெல்லாம் சாரு ஒரு வெத்துவேட்டு என்பதாகவே இருக்கிறது. ஓகே. நான் ஒரு வெத்துவேட்டு என்றே வைத்துக் கொள்வோம். ஊமைச் செந்நாய்க்கு நோபல் விருதே கிடைக்கட்டும். அதற்காக ஏண்டா இப்படிப் பதற்றம் அடைந்து தினமும் எனக்கு ஆபாசக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் எழுத்தாளனைக் கொண்டாடுவதை விட்டு விட்டு ஏன் என்னைப் போன்ற சாக்கடையை நினைத்து அழுது கொண்டே இருக்கிறீர்கள்? யாருக்கு மனநோய்? நீ விருந்து சாப்பிடுகிறாய். அதை ரசித்துத் தின்னாமல் ஏன் நரகலைப் பற்றி நினைக்கிறாய்? எனக்கு உங்களுடைய அங்கீகாரம் என் இடுப்புக்குக் கீழே உள்ள ரோமத்தைப் போன்றது. ப. சிங்காரத்தின் புயலிலோ ஒரு தோணி ஒரு க்ளாஸிக். ஆனால் தமிழில் யாருமே அது பற்றிப் பேசவில்லை, வெங்கட் சாமிநாதன் உட்பட. நானும் சி. மோகனும் சொல்லித் தான் தமிழ் இலக்கிய உலகமே புயலிலே ஒரு தோணியைத் திரும்பிப் பார்த்தது. ராஸ லீலா பற்றி யாருமே பேசவில்லை என்பதே அந்த நாவல் சர்வதேசத் தரம் வாய்ந்தது என்பதற்கு ஒரு சான்று என நான் நினைக்கிறேன். இதில் பவா போன்றவர்களை இழுக்க வேண்டாம். ராஸ லீலாவின் மீது மூத்திரம் அடித்தீர்களே, urinary infectionm எதுவும் வந்து விடவில்லையே? அது ஒன்றுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.
இந்த நபர் பெண்ணாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். ஆண்கள் அளவுக்குக் கிரிமினல் வேலைகளை பெண்கள் செய்ய முடியாது என்றே இன்னமும் நம்பும் பிற்போக்குவாதி நான். எனக்கு ஒரு விஷயம் தான் புரியவில்லை. ஒரு உன்னதமான படைப்பை ரசிக்கும் இவர்கள் ஏன் எப்போதும் என்னைப் போன்ற நரகலை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? யார் மனநோயாளிகள்? யாருக்குக் கவுன்ஸலிங் தேவை? ஊமைச் செந்நாயைப் படித்து ஒருவர் இந்த அளவுக்கு மனநோய் கொண்டு ஒரு புத்தகத்தை எடுத்து மூத்திரம் அடிக்கிறார் என்றால் அது அந்தப் புத்தகத்தின் தப்பா? ஆளின் தப்பா? உங்கள் வீட்டில் ஒருவர் ஒரு புத்தகத்தை வைத்து அதன் மீது மூத்திரம் அடித்தால் அவரை உடனடியாக என்ன செய்வீர்கள்?
இந்த ஆட்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. எனக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து ரொம்ப நாள் ஆகி விட்டது. நீங்கள் என் புத்தகங்கள் மீது மூத்திரம் அடித்துக் கொண்டிருங்கள். எனக்குக் கவலையில்லை. அது மட்டும் அல்ல. என் மீதே மூத்திரம் அடித்தாலும் அது என்னைப் பாதிக்காது. lush soap போட்டால் நாற்றம் போய் விடும். என்னைப் பொறுத்தவரை என் மீது மூத்திரம் அடிப்பதால் அடுத்தவனின் ஆத்திரமும் மனநோயும் தீர்கிறது என்றால் அது போதும் எனக்கு. மனிதர்கள் அன்பானவர்களாக இருக்க வேண்டும். அது ஒன்றே என் குறிக்கோள். இந்த இலக்கிய லவ்டா எல்லாம் அடுத்த பட்சம்தான்.
Comments are closed.