நன்கொடையும் இலவசமும் குறிப்பின் தொடர்ச்சி இது. எக்ஸைல் முதல் வடிவம் பத்து பிரதிகளும் தீர்ந்து விட்டன. என் நூலகத்தின் இட நெருக்கடியைத் தீர்க்கும் பொருட்டு இந்த ஏற்பாடு. இப்போது ஒரு அரிய நூல் கிடைத்தது. உங்களுக்குத் தெரியும், உயிர்மையில் என் புத்தகங்கள் வரும் வரை என் புத்தகங்களுக்கு நானேதான் பதிப்பாளன். அவ்வகையில் ஒவ்வொரு புத்தகத்தையும் ஒவ்வொரு பதிப்பகப் பெயரில் வெளியிடுவேன். முதல் புத்தகமான ஜேஜே சில குறிப்புகள் – ஒரு விமர்சனம் என்ற நூலை சாரு பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் வெளியிட்டேன். பிறகு கிரணம் வெளியீடு. பிறகு என்னென்னவோ பெயர்கள். கடைசிப் பெயர் Ecks Publication. அந்தப் பெயரில் 2005இல் வெளிவந்ததுதான் கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதி. பொடி எழுத்தில் 336 பக்கம். இதை யார் அதிக விலையில் கேட்கிறார்களோ அவர்களுக்குத் தந்து விடலாம் என்று இருக்கிறேன். உங்களால் எவ்வளவு முடியும் என்று எழுதுங்கள். எனக்குக் கிடைக்கும் பணம் அவ்வளவும் என் பயணங்களுக்கும் பூனை உணவுக்கும் மட்டுமே பயன்படுகிறது. எனக்கென்று எந்த செலவும் இல்லை. அதையெல்லாம் என் நண்பர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் பல் கட்டுவதற்காக (crown) ஒன்றரை லட்சம் ரூபாய் ஆனது. அது போன்ற அதி பயங்கர செலவுகளுக்குத்தான் நண்பர்களை நாடுவதில்லை.
எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com