தி இந்துவில் ஒரு விவாதம்…

என் கருத்து தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அந்தக் கருத்தை அந்தக் கணமே மாற்றிக் கொள்ள எப்போதுமே தயாராக இருப்பவன் நான்.  இணையத்தில் எழுதுபவர்களிடம் என்னால் நல்ல தமிழைப் பார்க்க முடியவில்லை.  அராத்து கூட விதி விலக்கு அல்ல.  அராத்துவின் கருத்துக்களும் பார்வைகளும் உள்ளடக்கமும் அபாரமான வீச்சு கொண்டவை என்றாலும் அவருடைய மொழி இன்னும் மாற்றம் அடைய வேண்டும்.  தேவையில்லாத ஆங்கிலக் கலப்பு இன்றைய இணைய எழுத்தாளர்களின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.    நல்ல தமிழ் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.  அதுதான் என் முதல் வேண்டுகோள்.  அடுத்து, ந.முத்துசாமி, க.நா.சு., நகுலன், கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன், அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், ப. சிங்காரம், மௌனி, இந்திரா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களை வாசியுங்கள்.  இவர்களை வாசிக்காமல் எழுத வருவது என்பது என் தந்தையை நான் இன்னும் சந்தித்தது இல்லை என்று சொல்வதற்கு ஒப்பானது.  என் குருதியில் ஓடும் ரத்தத்தில் இவர்கள் இருக்கிறார்கள்.  என் உரைநடையை இன்று பலரும் – என்னை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட – சிலாகிக்கிறார்கள்.  அதற்கு மேற்கண்டவர்களே காரணம்.

தி இந்து விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்.  உங்கள் கருத்தை நானும் அறிய ஆர்வமாக இருக்கிறேன்.  என் கருத்தை நீங்கள் தவறு என்று நிரூபித்தால் அதனால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

http://tamil.thehindu.com/opinion/discussion/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE/article5609367.ece

Comments are closed.