முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்குப் பரிசு

எங்களுடைய (ஸீரோ டிகிரி பதிப்பகம்) இரண்டாவது மொழிபெயர்ப்பு நாவல் இது. கடினமான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல். 2019ல் மொழிபெயர்ப்பு முடிந்துவிட, பின் ஒவ்வொரு வரியாக எடுத்துக்கொண்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு சரியான அர்த்தத்துடன் வந்திருக்கிறதா என்று பார்க்க ஒன்றரை வருடம் . சாரு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தன் நேரத்தை இதற்காக ஒதுக்கினார். தாமரைச் செல்வியாகிய Thendral Sivakumarஐப் பற்றி சொல்ல வேண்டுமானால் எனக்கு சட்டென்று தோன்றும் வாக்கியம் ‘She’s publisher’s delight’. சொன்ன நேரத்தில் சொன்னபடி வேலையை செய்து முடிப்பதாகட்டும் மறுப்போ சலிப்போ இல்லாமல் பிரதியில் மாற்றங்கள் செய்ய ஒப்புக் கொள்வதாகட்டும் , இப்படி எதற்கும் கடுகளவுகூட முகம் சுளிக்காமல் பொறுமையுடன் வேலை செய்வதற்கு ஒரு ஞானியின் மனநிலை வேண்டும். அதுவும் சாருவுடன் சேர்ந்து மொழியாக்கம் செய்ய அகத்திய மாமுனிவரிலிருந்து இப்போதிருக்கும் கார்ப்பரேட் சாமியார்வரை அவ்வளவு பேருடைய ஆசியும் நிரம்பி வழிய வேண்டும். Amazing தென்றல். ஒரு பெரிய வலம் வர வாழ்த்துகள் . இன்றைய காலகட்டத்தின் அரசியலைப் பேசும் நாவல். பரிசுக்குரியதாக இந்நாவலை தேர்ந்தெடுத்த வாசகசாலைக்கு நன்றி.

***

ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் வரிகள் மேலே உள்ளது. இதில் ”
சாருவுடன் சேர்ந்து மொழியாக்கம் செய்ய அகத்திய மாமுனிவரிலிருந்து இப்போதிருக்கும் கார்ப்பரேட் சாமியார்வரை அவ்வளவு பேருடைய ஆசியும் நிரம்பி வழிய வேண்டும்” என்ற அடைமொழிக்கு உரியவர் நான் அல்ல, காயத்ரிதான் என்பதை உலகமே அறியும். என்னோடு பணி புரிவதோ நட்பு கொள்வதோ எத்தனை கொண்டாட்டமான விஷயம் என்பதை சீனி, ஸ்ரீராம் போன்ற நண்பர்களிடம் கேளுங்கள். வினித்தும் நல்லபடியாகத்தான் சொல்வான் என நினைக்கிறேன்.

May be an image of 3 people and text that says "வழங்கும் தமிழ் இலக்கிய விருதுகள் 2021 சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் தருண தேக்ட 160 முகமூடிகளின் பள்ளத்தாக்கு முகமூடிகளின் பள்ளத்தாக்கு ழுத்தாளர் தாமரைச் செல்வி ஜுத்தாஜர் சாரு நிவேதிதா வாசகசாலை முப்பெரும் விழா நாள்:18.12.2021(சனிக்கிழமை) (சனிக்கிழமை) நேரம்: மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வெங்கட்நாராயணாரோடு, நாராயணா தி.நகர். சென்னை. அனைவரும் வருக..!"