வான் ஹூசனில் ஒரு சிவப்பு நிற சட்டை வாங்கினேன். வாங்கிப் பல காலம் இருக்கும். தூய பட்டுத் துணி என்பதால் பெண்கள் வைத்துக் கொள்ளும் பட்டுப் புடவை மாதிரி ஒரு டிகேட் வந்து விட்டது. என் சட்டைகளிலேயே அதி அழகு சட்டை அதுதான். அதே துணியில் பச்சை மஞ்சள் ஊதா என்று வாங்கலாம் என்று போனால் கிடைக்கவில்லை. நம் வினித் கூட பல ஊர்களில் தேடியிருக்கிறான். அவனுக்கு. கிடைக்கவில்லை. அந்த சட்டையை எப்போதோ ஒரு போட்டோ ஷூட்டுக்கு அணிந்திருந்தேன் போல.
இன்று ஒரு பெண்ணின் ப்ரொஃபைல் பிக்சரில் அந்த சட்டையின் ஒரு இணுக்கை மட்டும் காண நேர்ந்தது. அதாவது, அந்தப் பெண் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை வெளியே போட முடியவில்லை. என்னை மட்டும் கட் பண்ணி தூக்கி விட்டார். சரியாகக் கட் பண்ணாததால் என் கையின் ஒரு பகுதியும் சட்டையின் துணுக்கும் தெரிகிறது.
டார்ச்சர் கோவிந்தனைத்தான் டார்ச்சருக்கென்று வைத்திருக்கிறேன் என்றால், இப்படி ஆளாளுக்கு டார்ச்சர் கொடுக்கிறார்கள்.
இனிமேல் எந்தப் பெண்ணோடும் புகைப்படம் எடுத்துக் கொள்வதாக இல்லை.