இன்று காயத்ரியின் ஃபேஸ்புக் பதிவு இது:
”காலத்திற்கேற்ப எல்லாம் மாறும். Literature too!
இப்போது பெண்கள் அணியும் உடைகளை 100 ஆண்டுக்கு முந்தைய ஆள் பார்த்தால் இந்தப் பெண்களை எப்படி வர்ணிப்பார்? ஷேக்ஸ்பியரின் ஜூலியட்டின் வயது 13 மட்டுமே. (‘she hath not seen the change of fourteen years’) இக்காலத்தில் அவள் சிறுமி. Similarly, narration too varies from time to time. ‘தி. ஜா. போல், இன்னும் சிலரைப்போலத்தான் explicit material ஐ கையாள வேண்டும் என நினைக்கும் பாங்கு, மாட்டை தெய்வமாக வணங்குபவனுக்கும், மாட்டை அடித்துத் தின்பவனுக்குமான அழகியல் வேறுபாடு. உயர்குடிப் பார்வை! யாரும் யாருடைய narration ஐயும் திட்ட முடியாது. (Read few French authors please!)
‘பொண்டாட்டி’ பிடிக்கலை, morbid என நினைப்பவர்கள் வேறு தங்களுக்குப் பிடித்ததைப் படிக்கலாம், எங்களுக்கு அறிவுரை சொல்லி நேரத்தை வீணடிக்காமல்…”
யாரோ காலங்காலையில் காயத்ரிக்கு டார்ச்சர் கொடுத்திருக்கிறார் போல. டார்ச்சர் கோவிந்தனோ? அராத்துவின் NTTF படித்து விட்டேன். தமிழில் இதுவரை இப்படி ஒரு கதை வந்ததில்லை. வழக்கம் போல் இலக்கியவாதிகளுக்குப் பிடிக்காது. பிடிக்கிறதோ இல்லையோ, இதுதான் இன்றைய ஆண் பெண் வாழ்க்கை. ஏன் இலக்கியவாதிகளுக்குப் பிடிக்காது என்றால், இலக்கியவாதி எல்லோருமே முப்பது வயதுக்கு மேல். முப்பதுக்குள் இருக்கும் இலக்கியவாதிகளுக்கு துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கை தெரியாது. இலக்கியவாதிகளின் பசங்களுக்கு இந்த வாழ்க்கை இந்த நிஜம் தெரியும். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் தமிழில் படிப்பதில்லை. எனவே கிழவர்களும், இளவயதுக் கிழவர்களுமாக இதைப் படித்து அதிர்ச்சி அடைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இது நான் எழுத வேண்டிய கதை. ஆனால் சூழல் என்னை எழுத விடாது. எனக்கு கனவான் நாற்காலி கொடுக்கப்பட்டு விட்டது. இனிமேல் இப்படி எழுதுவது சாத்தியமில்லை. ஔரங்கசீப்பில் ஆணுறுப்பைக் குறிக்கும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை வந்ததற்கே எல்லோரும் மூக்கு சிந்தி அழுது விட்டார்கள். இப்படி ஒரு நல்ல நாவலில் இப்படி ஒரு கெட்ட வார்த்தையா என்று கேட்டு.
NTTF தி.ஜா. இன்று இருந்தால் நிச்சயமாக இப்படித்தான் எழுதியிருப்பார். அவர் ஏன் இன்னமும் மோகமுள் எழுதிக் கொண்டிருக்க வேண்டும், இந்த 2022இல்? NTTF மாதிரிதான் எழுதியிருப்பார். சந்தேகமே இல்லை. அந்தக் காலத்திலேயே அம்மா வந்தாளும், மரப்பசுவும் எழுதியிருக்கிறாரே? மற்றதை இன்று இரவு கதைப்போம். ஃபாத்திமா பாபு க்ளப் ஹவுஸில் இந்தக் கதையை வாசிக்கிறார். லிங்கை ஃபாத்திமாவின் பக்கத்திலிருந்து எடுத்துக் கொள்ளவும். கதைப் பெயர், No Time To Fuck.