என்னோடு பழகுவது கடினம் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறேன். நேர்ப் பழக்கத்திலும் நட்பிலும் எப்போதுமே அறம் கோருபவன் நான். ஒருவர் அவரது வாழ்வில் எப்படிப்பட்டவராகவும் இருக்கலாம். நான் எவ்விதமாகவும் அவரை மதிப்பீடு செய்வதில் ஈடுபடவே மாட்டேன். ஆனால் நட்பில் அறம் சார்ந்து செயல்படுபவராக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஐந்து ஆண்டுப் பழக்கம் உள்ள என் நண்பர் ஒருவரை 40 ஆண்டுப் பழக்கம் உள்ள நெருங்கிய நண்பர் அவமதித்து விட்டார். அந்தப் பழைய நண்பரை என் வட்டத்திலிருந்து விலக்கி விட்டேன். ஆனால் அந்த இரண்டு பேரும் நண்பர்களாகவே உள்ளனர். அது பற்றி எனக்குக் கவலை இல்லை. என் நெருங்கிய நண்பர் ஒருவர் என்னுடைய இன்னொரு நெருங்கிய நண்பரிடம் வாங்கிய பணத்தை அவரிடம் சொல்லாமலேயே ரொட்டேஷனில் விட்டு விட்டார். பணம் இல்லாதவரும் இல்லை. திருப்பிக் கொடுப்பதில் ஏகப்பட்ட பொய்கள், குளறுபடிகள். இன்னும் இது போல் வெளியே சொல்ல முடியாத சில புகார்கள். இதை விடவும் கடுமையாக. அவரையும் நட்பு வட்டத்திலிருந்து விலக்கி விட்டேன். என் மீது அளப்பரிய அன்பு கொண்டவர். என்ன செய்வது? இப்படிப்பட்ட காரணங்களால் எனக்கு நண்பர்கள் மிகவும் சொற்பம்…
எனக்கு வசை கடிதங்கள் வராத நாளே இல்லை. அக்கடிதங்களைப் பார்த்தால் கோபமே வராது, மாறாக மனதில் கருணை சுரக்கும். அவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கும்.
ஆனால் என் வாசகர்கள் என சொல்லிக் கொண்டு அன்பு மிகக் கொண்டு எழுதப்படும் சில கடிதங்கள் என்னை வெகுவாக பாதிப்பது உண்டு. அப்படி ஒரு கடிதம் இது. இதற்கு நான் பதில் எழுத வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு முன் இவர் என்ன செய்கிறார் என்று அறிய ஆசை. இளைஞர் என்று கடிதத்திலேயே யூகித்து விட்டேன். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ஏனென்றால், சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழ்பவர் என்றால் இதைப் பொருட்படுத்தாமல் கடந்து விடுவது என் பழக்கம். ஆனால் அன்பர் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடர் பணி. நான் பதில் எழுதுவதை விட இதை நண்பர்களுக்கு அனுப்பலாம் என்று இருவருக்கு அனுப்பினேன். ஒருவர் ப்ரஸன்னா.
என் சார்பாக ப்ரஸன்னா எழுதிய பதில் கடிதத்தைத் தொடர்ந்து வருகிறது.
அன்புள்ள சாரு சார்,
எனது பெயர் ……………, கோவையிலிருந்து எழுதுகிறேன்.
உங்கள் புத்தகங்களை நான் இதுவரை படித்ததில்லை, ஆனால் உங்களைப் பற்றி ஓரளவு படித்திருக்கிறேன் (wikipedia-வில்). Book Store ஒன்றில் நீங்கள் எழுதிய புத்தகத்தை வாங்குவது என்ற நோக்குடன் சென்றிருந்தேன். என் கண்ணில் சிக்கியது கோணல் பக்கங்கள் புத்தகம் மட்டும் தான் (எனது தவறு தான்). அதிலும் மூன்றாம் பாகம் என்பதைக் கூட பாராமல் வாங்கி வந்துவிட்டேன். முதல் இரண்டு பாகத்தை Amazon, Flipkart என்று online shopping ல் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் உங்களிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டேன். தங்களிடம் இருந்தால் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
நான் ஒரு புத்தகம் எழுதலாம் என்றெண்ணியுள்ளேன், என்னத்தை படித்துவிட்டாய் என்றால் கேட்டால், “ஏதோ” என்பதே என் பதில். ஆசிரியனிடமிருந்து அறிவுரை எதிர்பார்க்கும் மாணவனாக நான் இதை எழுதுகிறேன்.
நன்றிகளுடன்,
——————. |
கைபேசி எண்:—————————
அன்பருக்கு சாருவாக இருந்து ப்ரஸன்னா எழுதிய பதில். என் பதிலாகவே இதைக் கொள்ளலாம்.
டியர் ———–,
என் ஸில்ஸிலாவில் உள்ள அனைவரையுமே நான்தான் நீங்கள் எதிர்பார்க்கும் அளவைவிட அதிகமாகவே அன்பும் ஆதரவும் கொடுத்து நீங்கள் எழுத நினைக்கும் “Fictional Book” களை எழுத வைத்திருக்கிறேன். உங்களிடம் அதிசயிக்கத்தக்க எழுத்துத் திறமை உள்ளது. நான் ஒன்று செய்கிறேன், வேண்டுமானால் என்னிடம் உள்ள சில இளம் பெண் உதவியாளர்களை அனுப்பட்டுமா? அவர்கள் நீங்கள் சொல்லுமிடத்துக்கே கோணல் பக்கங்கள் தொகுதிகளைக் கொண்டுவந்து கொடுத்துப் பார்த்து, உங்களது இலக்கிய ஆர்வத்தைப் பாராட்டி கொஞ்ச நேரம் பேசுவார்கள்.
உங்களது ஆர்வத்தைப் பொறுத்து உங்களுக்கு மாதா மாதம் எவ்வளவு உதவித்தொகை வழங்குவது என்பதையும் அவர்கள் முடிவு செய்வார்கள். ம் மறந்தேவிட்டது. நீங்கள் என்ன அருந்துவீர்கள் என்று சொன்னால் வரும்போது அவர்களை வாங்கி வரச்சொல்கிறேன்.
சாரு
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai