சொற்கடிகை – 12: ஓஷோவின் குரலில்…

இதுதான் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் வைத்து நடந்த சம்பவம்.  சம்பவத்துக்கும் பதிப்பகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  ஒளிப்பதிவு அங்கே நடந்தது.  அவ்வளவுதான். 

ஒரு தொலைக்காட்சியின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொறுப்பாளர் என்னை அழைத்தார்.  அழைத்து ஒரு வாரம் இருக்கும்.

புத்தக விழா சம்பந்தமா உங்கள்ட்ட ஒரு பைட் எடுக்கணும் சார்.  உங்கள் புத்தகங்களில் ஒரு ஆறு புத்தகம் பற்றிப் பேச வேண்டும் சார்.

என்னது, ஆறு புத்தகமா?

ஆமாம் சார், ஆறு இல்ல அதுக்கும் மேல வேணும்னாலும் பேசலாம் சார்.

எவ்ளோ நேரம் பேசணும்?

ஏழு நிமிஷத்திலேர்ந்து எட்டு நிமிஷம் சார்.

என்னங்க இது, ஏழு நிமிஷத்துல எப்டி ஆறு புத்தகம் பற்றிப் பேச முடியும்?  ஒரு புத்தகத்துக்கு ஒரு நிமிடமா?

இல்லை சார்.  ஒரு புத்தகத்துக்கு ஏழு நிமிஷம். 

அப்போன்னா இதுக்கு பேரு பைட் இல்லியே.  இது பெரிய உரை ஆயிற்றே?  ஒரு மணி நேரத்துக்கு மேலயே ஆகுமே?

ஆமா சார்.

அப்போன்னா வேண்டாம்.  நான் ஔரங்ஸேப் நாவல் எழுதுறதில மூழ்கிக் கிடக்கேன்.  ராப்பகலா அதைத்தான் எழுதிக்கிட்டு இருக்கேன்.  தூக்கம் கூட இல்லை.

அப்டியா சார், ஔரங்கசீப்பா சார்?  வாழ்த்துக்கள் சார். 

எதுக்கு, தூக்கம் கூட இல்லாம எழுதுறதுக்கா?

ஹி ஹி இல்ல சார்.  ஔரங்கசீப்புக்கு.

அதை நீங்க ஔரங்ஸேப் கிட்டேல்ல சொல்லணும்.

ஹி ஹி.

அப்போ வைக்கட்டுமா.  நீங்க சொல்றதை எடுக்க மட்டுமே ரெண்டு மணி நேரம் ஆகும்.  ஒரு புத்தகம் பற்றி ஏழு நிமிடம்னா ஆறு புத்தகம்.  வேண்டாம்.  விடுங்க. 

சார், புத்தக விழா.  மலேஷியாவிலேர்ந்துல்லாம் உங்க ரசிகர்கள் கேட்கிறாங்க.  உங்க புத்தகங்களுக்குத்தான் ப்ரமோஷன் கிடைக்கும். 

எனக்கு காயத்ரியின் ஏழ்மை நிலை ஞாபகம் வந்தது.  பதிப்பகத்திலிருந்து தம்பிடி வரவில்லை என்று ஃப்ரெஞ்ச் ட்யூஷன் எடுக்கிறாள்.   

சரிங்க.  ஓக்கே.

வீட்டு அட்ரஸ் கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா சார்?

இனிமேல் எதற்காகவும் என் வீட்டில் படப்பிடிப்பு நடத்த இயலாத நிலையில் இருக்கிறேன் நான்.    

காரணம், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்.  லக்கியையும் லக்கியின் நான்கு குட்டிகளையும் ஒரு நண்பரிடம் கொடுத்தோம்.  அவர் வீட்டில் பெரிய தோட்டம் உண்டு.  பணியாளர்களும் உண்டு.  ஆனால் இரண்டு தினங்களிலேயே பூனைகள் அங்கே சரியாக இருக்க முடியாது என்று தெரிந்து விட்டது.  அதனால் கொண்டு வந்து விடலாம் என்று முடிவு செய்தோம்.  அந்நியர்கள் பூனைகளைப் பிடிக்க முடியாது.  வெகுவாக பயந்து போகும்.  என் குரலுக்கோ அவந்திகாவின் குரலுக்கோ மட்டுமே ஓடி வரும்.  ஆனால் நண்பரோ என்னை ஏன் அவ்வளவு தூரம் அலைய வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பணியாளர்கள் மூலம் பிடித்ததில் அவை இப்போது எந்த மனிதரைக் கண்டாலும் பயப்படுகின்றன.  நானே வேட்டியில் இருந்தால் என் மீது துள்ளிக் குதித்து விளையாடுபவை பேண்ட் அணிந்தால் தெறித்து ஓடுகின்றன. 

ஆனால் சம்பவம் நடப்பதற்கு முன்னால் அவைகளுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவை.  வீட்டில் தச்சர் வந்து வேலை செய்தால் கூட தச்சரை சுற்றி அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும்.

அதனால் ஒளிப்பதிவை வெளியே வைத்துக் கொள்வோம் என்றேன்.

எங்கே வச்சுக்கலாம் சார்?

உங்கள் ஸ்டுடியோவுக்கே வந்து விடுகிறேனே?

கேட்டு சொல்றேன் சார்.

அதற்கு ஒரு இரண்டு மணி நேரம் எடுத்தது.

வாங்க சார்.

போக வர ஆட்டோ செலவு இருநூறு ரூபாய் கொடுத்துடுங்க.

ஐயோ, அதுக்கெல்லாம் பட்ஜெட் இல்லியே சார்.   

அப்படியா?  சரி, நான் என் நண்பரிடம் கேட்டு விட்டு உங்களை அழைக்கிறேன்.

சரி சார்.

ராம்ஜியை அழைத்து யோசனை கேட்டேன்.  மற்ற சமயம் என்றால் அடப் போங்கய்யா என்று விட்டு விடுவேன்.  இது புத்தக விழாக் காலம் என்பதால், அதிலும் துலாபாரம் சாரதா மாதிரி காயத்ரியின் ஞாபகம் வந்ததாலும் ராம்ஜியை அழைத்தேன். 

எரநூறு ரூபாய்க்கு பட்ஜெட் இல்லியா என்று கேட்டு வெடிச் சிரிப்பு சிரித்து விட்டு, நம்ம ஆஃபீஸ்லயே எடுத்துக்கலாமே சார் என்றார்.

தொலைக்காட்சி நண்பரை அழைத்து சொன்னேன். அட்ரஸ் கொடுத்தேன்.

ஒரு தேதி முடிவாயிற்று.

தொலைக்காட்சி நண்பர் அழைத்தார். 

சார், பைட்டுக்கு முன்னால…

ஏங்க, பைட் பைட்டுன்னு சொல்லாதீங்க.  ரெண்டு மணி நேர ஷூட் அது. 

ஹி ஹி, சரி சார்.  அதுக்கு முன்னாடி உலக சினிமா பத்தி ஒரு சின்ன பைட் குடுக்கணும்னு மலேஷியாவிலேர்ந்து உங்க ரசிகர்கள் எதிர்பாக்கிறாங்க சார்.

சினிமா பத்தியெல்லாம் பேச முடியாதுங்க.  நான் ஔரங்ஸேப் நாவலால ராத்தூக்கம் இல்லாம கெடக்கேன்.

வாழ்த்துக்கள் சார்.

ஏங்க, என் வாசகர்கள் ஏதோ தவறுதலா ரிபீட் ஆகுதுன்னு நினைச்சுடுவாங்க.  இந்த டயலாகை நாம் ஏற்கனவே பேசி முடிச்ச்டிட்டோம்.  என்னால ஒலக சினிமால்லாம் பேச முடியாது.  நேரம் இல்லை.

இல்ல சார். இது ஒலக சினிமா இல்ல சார்.  இலக்கித்திலேர்ந்து சினிமாவா எடுக்கப்பட்ட நாவல்கள்.  சாண்டில்யன் சார், கல்கி சார், இப்போ பொன்னியின் செல்வன் வருது இல்லியா, அந்த மாதிரி சரித்திர நாவல்கள்.  அதனால இதுவும் இலக்கியம்தான் சார்.  ஒங்களுக்கே தெரியுமே சார், நம்ம தொலைக்காட்சி சினிமாவுக்கு எதிரானதுன்னு. 

ஆம், அந்தத் தொலைக்காட்சி மேல் அந்த வகையில் எனக்கு ஒரு மென்னுணர்வு உண்டு.  மற்ற தொலைக்காட்சிகளைப் போல் இவர்கள் தங்கள் தொலைக்காட்சியை தமிழ் சினிமாவின் வாலாக ஆக்கவில்லை.  

சரிங்க, ஒரு ஏழு நிமிஷம் பேசறேன்.

அது போதுமே சார்.

ஒளிப்பதிவுக்கு முதல் நாள் அழைத்தவர், இன்னோரு  உங்களுக்குப் பிடித்த நாவல் பற்றி ஒரு ஏழு நிமிஷம் பேசணும் சார்.   ஒங்களோட மலேஷியா ரசிகர்கள் விரும்புறாங்க.

என்னாங்க இது, ஒண்ணு ஒண்ணு ஏத்துறீங்க?  என்னால முடியாதுங்க.  நேரம் இல்லை.

சார், ஒரே ஒரு ஏழு நிமிஷம்.  ஒங்களுக்குப் பிடித்த ஒரு நாவல் சார்.  புத்தக விழாவில அந்தப் புத்தகம் விய்க்கும்ல சார்.

சரிங்க.

எப்போ சார் ஷூட் வச்சுக்கலாம்.  உங்களுக்கு ஏத்த டைம் சொல்லுங்க சார்.

நீங்க சொல்லுங்க.

மதியம் ஒரு மணிக்கு வச்சுக்கலாம் சார்.

அப்போன்னா இங்கேர்ந்து கிளம்ப பன்னண்டு மணி.  அங்கே ஷூட் ஒரு மூணு மணி நேரம்.  லஞ்ச்சுக்கு நேரம் இருக்காது.  நான் இங்கே லஞ்ச் முடிச்சிட்டு மூணுக்குக் கிளம்பறேன். அங்கே நாலு மணிக்கு ஆரம்பிக்கலாம்.

இல்ல சார்.  கஷ்டம்.  ரெண்டரைக்குக் கெளம்ப முடியுமா சார்.

சரி.

மறுநாள் காயத்ரியிடமிருந்து இரண்டு மணிக்கு ஃபோன்.  அவர்கள் இங்கே வந்து விட்டார்கள். 

வரட்டும்.  நான் வர மூன்றரை ஆகும்.

இரண்டரைக்குக் கிளம்பினால் மூன்றே காலுக்குப் போய் விடலாம். 

சொன்ன நேரத்துக்குப் போனேன்.

டாக்டர் ஷிவாகோ பற்றி பத்து நிமிடம் பேசினேன்.

பிடித்த புத்தகத்துக்குப் போகலாமா என்றேன்.

இல்ல சார், அடுத்த படம். 

அப்டீன்னா?

அதான் சார்.  இந்த செக்மெண்ட்ல எட்டு படங்கள் பத்தி நீங்க பேசுவீங்க.  உங்கள் விருப்பம் சார்.  ஆறு படங்கள் பத்திக் கூட பேசலாம்.  எல்லாம் நாவல்லேர்ந்து சினிமாவா ஆகியிருக்கணும்.  சாண்டில்யன், கல்கியின் பொன்னியின் செல்வன் மாதிரி.

ஆக, ஆறு படங்கள் பத்தி ஒவ்வொரு படத்துக்கும் ஏழெட்டு நிமிடம்?

ஆமா சார்.

நான்தான் சொன்னேனே, சினிமா பத்தி நான் பேச முடியாதுன்னு?

இது சினிமா இல்லியே சார்.  இலக்கியம்.  நாவல்லேர்ந்து சினிமா.  சாண்டில்யன், கல்கி நாவல்லேர்ந்து சினிமா வருதுல்ல.  அந்த மாதிரி… ஹி.ஹி.

கிங் லியர் பற்றிப் பேசினேன்.  குரஸவாவின் ரான்.  நண்பர் கிங் லியர் ஸ்பெல்லிங் கேட்டார்.  தன் நோட்டில் குறித்துக் கொள்ள. ஒவ்வொரு எழுத்தாகச் சொன்னேன்.  King leer என்று எழுதினார். 

பத்து நிமிடம் பேசி விட்டு “பிடித்த புத்தகத்துக்குப் போகலாமா?” என்று கேட்டேன். 

இல்ல சார், அடுத்த படம் என்றார். 

அப்டீன்னா?

அதான் சார்.  இந்த செக்மெண்ட்ல எட்டு படங்கள் பத்தி நீங்க பேசுவீங்க.  உங்கள் விருப்பம் சார்.  ஆறு படங்கள் பத்திக் கூட பேசலாம்.  எல்லாம் நாவல்லேர்ந்து சினிமாவா ஆகியிருக்கணும்.  சாண்டில்யன், கல்கியின் பொன்னியின் செல்வன் மாதிரி.

ஆக, ஆறு படங்கள் பத்தி ஒவ்வொரு படத்துக்கும் ஏழெட்டு நிமிடம்?

ஆமா சார்.

நான்தான் சொன்னேனே, சினிமா பத்தி நான் பேச முடியாதுன்னு?

இது சினிமா இல்லியே சார்.  இலக்கியம்.  நாவல்லேர்ந்து சினிமா.  சாண்டில்யன், கல்கி மாதிரி…

வேறு வழியில்லாமல், டாக்டர் ஷிவாகோ பற்றிப் பேசினேன்.  பத்து நிமிடம். அடுத்து அன்னா கரினினா பற்றிப் பேசினேன்.  பத்து நிமிடம்.  Feast of the Goat பற்றிப் பேசினேன்.  பத்து நிமிடம்.  பியானோ டீச்சர் பற்றிப் பேசினேன்.  பத்து நிமிடம்.  இன்னும் ரெண்டு மூணு படம் பற்றிப் பேசினேன்.

எல்லாம் உலக இலக்கியத்திலிருந்து படமாக்கப்பட்டவை.  எந்தவித முன் தயாரிப்பும் இன்றிப் பேசினேன்.  மொத்தம் அறுபது நிமிடம் காலி.  ஒவ்வொரு படம் முடிந்ததும் நிறுத்தியதில் தனியாக ஒரு இருபது நிமிடம். 

இன்னும் இரண்டு படங்கள் பற்றிக் கூடப் பேசலாமே சார். உங்களால முடியாததா சார்?

நூறு படங்கள் பற்றிக் கூட பேசலாங்க.  இப்போ டைம் இல்லேங்கிறது பிரச்சினை இல்லை.  நீங்க பைசா குடுக்காம இலவசமால்ல கேட்கிறீங்க?  வின் டிவியில் கூடத்தான் ஒரு முப்பது உலக சினிமா பற்றிப் பேசினேன்.  நூறு சினிமா என்பது திட்டம்.  அப்புறம்தான் தெரிந்தது எல்லாம் ஓசியில் என்று. அதனால் நிறுத்தி விட்டேன்.  நாமும் இதோடு நிறுத்திக் கொள்வோம்.

நன்றி சார்.  இப்போ உங்களுக்குப் பிடித்த புத்தகம் பற்றி ஏழு அல்லது எட்டு நிமிடம்.  பத்து நிமிஷம்னாலும் பரவால்ல.

ஒரு புத்தகம்?

இல்ல சார்.  எட்டு புத்தகம்…  ஹி ஹி. 

ஒரு புத்தகத்துக்கு எத்தனை நிமிடம்?

ஆறு அல்லது ஏழு நிமிடம் சார்.  நீங்க பத்து நிமிஷம் கூடப் பேசலாம். 

அப்படி எட்டு புத்தகம்?

ஆமா சார்.  ஹி. ஹி.

அப்புறமா என் புத்தகங்கள் பற்றி?

ஆமா சார்.  ஹி.ஹி. 

என் புத்தகங்கள் எத்தனை?

ஒரு எட்டு புத்தகம் சார்.  ஹி. ஹி.

ஒவ்வொண்ணும் எத்தனை நிமிஷம்?

ஏழு அல்லது எட்டு நிமிஷம்.  நீங்க பத்து நிமிஷம் கூடப் பேசலாம் சார்.  ஹி.ஹி.

ஒரு நிமிஷம் உக்காருங்க. 

சொல்லி விட்டு ராம்ஜியை அழைத்தேன்.  ஏனென்றால், சண்டைக் காட்சியில் சாட்சி வேண்டும்.  காயத்ரி வேண்டாம்.  பயந்து விடுவாள்.  பலஹீன மனம்.  The Platform என்ற படம் பார்க்கச் சொன்னேன்.  ரெண்டே நிமிடத்தில் கதி கலங்கி விட்டதாம்.  இப்போது நடக்கப் போகும் ஃபைட் சீன் ராவணன் படத்தில் வரும் சண்டைக் காட்சி போன்றது.  இரண்டு மலை முகடுகளுக்கு இடையே கயிற்றுப் பாலம்.  அதில் தொங்கிக் கொண்டு சண்டை.  ராம்ஜிதான் லாயக்கு.  அவர்தான் ரத்தம் பார்த்தவர்.

ராம்ஜி வந்தார்.  விஷயத்தை விலாவாரியாக விளக்கினேன்.

இப்போது தொலைக்காட்சிக்காரரைப் பார்த்து சொன்னேன்.

மொத்தம் 24 ஷூட்.  ஒரு ஷூட் பத்து நிமிடம்.  உலக சினிமா 8.  உலக இலக்கியம் 8.  என் நூல்கள் 8.  இதை ஒரு பைசா இல்லாமல் என்னை வைத்து ஷூட் பண்ணப் போகிறீர்கள்.  எல்லாம் ஓசியில். 

மன்னிக்கணும் சார்.  நான் தான் அப்போதே சொன்னேனே சார்.  இலக்கியத்திலேர்ந்து சினிமாவா எடுத்ததுன்னு.

நான் என்ன சொன்னேன்?  முடியாதுன்னு சொன்னேனா இல்லியா?  அப்றம் ஏன் என்னை வந்து assfuck பண்ணுகிறீர்கள்?

மலேஷியாவிலேர்ந்து உங்க ரசிகர்கள் விரும்புறாங்க சார்.

ஆமா, விரும்புவாங்கதான்.  உலகப் பேரழகியோடு இன்றிரவு ஃப்ரீயாக ஸால்ஸா டான்ஸ் ஆடலாம் என்று சொன்னால் ஒரு லட்சம் பேர் க்யூவில் நிற்பார்கள் இல்லையா?  (நான் சொன்ன உதாரணம் வேறு.  இங்கே ஸால்ஸா என்று போட்டிருக்கிறேன்)  இத்தனைக்கும் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் பணம் கட்டித்தான் பார்க்கிறார்கள்.  அவர்கள் ஒன்றும் ஓசியில் பார்க்கவில்லை.  நீங்கள்தான் ஓசியில் assfuck பண்ணுகிறீர்கள். 

மன்னிக்கணும் சார்.

மன்னிக்க முடியாதுங்க.  உங்களை மன்னிக்கவே முடியாது.  லிஃப்ட்ல கூட வர்ற பொண்ணோட மொலையப் புடிச்சு அமுக்கிட்டு மன்னிப்புன்னு கேட்டுட்டா ஆச்சா?  என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? 

இதே ரீதியில் ஓஷோவின் குரலில் மென்மையாக சாந்தமாக ஒரு பத்து நிமிடம் பேசினேன். 

சரிங்க சார்.  மீண்டும் சந்திப்போம் சார். 

எதுக்கு மறுபடியும் assfuck பண்றதுக்கா?  இனிமேல் நாம் சந்திக்கவே வேண்டாம்.  நான் சமூக விரோதிகளை சந்திக்க விரும்புவதில்லை.  உங்களை விட நடிகைகளின் பிருஷ்டத்தையும் மார்பையும் காண்பித்து காசு பண்ணும் தொலைக்காட்சிகள் எத்தனையோ மேல்.  கிளம்புங்கள்.

மொத்தமாக எனக்கு இரண்டு நாட்கள் வீண். 

பிரபலங்கள் ஏன் மூர்க்கமாக இருக்கிறார்கள் என்பதை அன்று நான் புரிந்து கொண்டேன். 

இந்த ஒட்டு மொத்த சம்பவத்திலும் பெரும் நகைமுரண் என்னவென்றால், இதுவரை இவர்கள் பத்து இருபது எழுத்தாளர்களிடம் இந்த நிகழ்ச்சிக்கு ஷூட் செய்திருக்கிறார்கள் என்று சொன்னார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்!!!

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai