சொற்கடிகை – 13

ஹொடரோவ்ஸ்கியின் புகைப்படத்தைப் பார்த்து என் ஞாபகம் வந்ததாக ரிஷி, அய்யனார், வினித் மற்றும் இன்னும் இரண்டு மூன்று நண்பர்கள் எனக்கு மெஸேஜ் செய்திருந்தார்கள்.\

ஔரங்ஸேப் முடிந்த கையோடு ஒரே வாரத்தில் ம்யாவ் என்று ஒரு இருநூறு பக்க நாவல் வரும். அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது எழுதி வருகிறேன். அவ்வளவாக நிறைய பேருக்குப் பிடிக்காது. ஓரிரு அத்தியாயங்களைப் படித்து இயக்குனர், ஒளிப்பதிவாளர் செழியன் நாவலுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். சீனிக்கும் பிடித்திருந்தது ஆச்சரியம்தான். அதற்கான உட்பக்கப் படத்தில் இப்படி ஒரு படம் போடலாம். என் டெட்டியுடன். டெட்டி மட்டுமே என்னோடு இந்த அளவுக்கு ஐக்கியம். இந்தியப் பூனைகள் இத்தனை சௌஜன்யமானவை அல்ல. இவை மனிதர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பவை. டெட்டி என் நிழல் மாதிரி. முழுக் கறுப்பு. பேரழகு. எப்போதாவது அது புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்தால் உங்களுக்குப் பார்க்கக் கிடைக்கும்.