முதல் நூறு : 5

5. இலக்கிய ஆக்கங்களை மறு வாசிப்பு செய்யும்போது, அந்த படைப்பு  முன்பு நம்மில் ஏற்படுத்தி இருந்த தாக்கத்தை முற்றிலும் மாற்றக்கூடிய தருணங்கள் சில உண்டு. உங்களின் பார்வையில், மறு வாசிப்பில், மறு வாசல் ஒன்றினை திறந்த படைப்புகள் இரண்டை குறிப்பிட இயலுமா?

யோகேஸ்வரன் ராமநாதன்.

பதில்: என்னைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குத் தெரியும், எனக்கு அப்படி நடந்துள்ளது.  புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன் ஆகிய இருவரையும் மறு வாசிப்புக்கு உட்படுத்திய போது கடவுளை தரிசித்தது போல் உணர்ந்தேன்.  இளம் வயதில் இவர்கள் இருவரையுமே நிராகரித்து விட்டேன்.  புதுமைப்பித்தனை நிராகரித்ததற்குக் காரணம், அவர் கதைகளில் ஒருசில இடங்களில் தென்பட்ட சாதீயம்.  அது அவரது மேதமையை என்னைக் காண விடாமல் செய்து விட்டது.  பின்னர் அராத்துதான் புதுமைப்பித்தனை மீண்டும் வாசிக்கச் சொன்னார்.  அராத்து சொன்னது எனக்கு விசேஷம்.  ஏனென்றால், மூத்த எழுத்தாளர்கள் பலர் அவரை ஈர்க்கவில்லை.  அப்படிப்பட்டவர் சொல்கிறார் என்றால், விஷயம் இருக்க வேண்டும் என்று படித்தால் அதுவரை நான் தாஜ் மஹலை வெறும் கட்டிடம் என்று நினைத்துக் கொண்டிருந்து விட்டேன் என்று புரிந்தது.  அவருடைய கட்டிலை விட்டிறங்காக் கதைதான் என்னுடைய நான் – லீனியர் கதைகள் பலவற்றுக்கு மூலமாக இருந்ததையும் உணர முடிந்தது.  பாரதிக்குப் பிறகு புதுமைப்பித்தன் அளவுக்கு தமிழை நவீனப் படுத்திய ஒரு கலைஞன் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.  அவருடைய 99 கதைகளையும் பலமுறை வாசித்தேன்.  அவர் வாழ்வைப் படித்தேன்.  அவரைப் பற்றி சுமார் நான்கு மணி நேரம் செல்லக் கூடிய பேருரை ஒன்றை ஆற்றினேன்.  உங்களுக்கு அந்த உரையின் பதிவை அனுப்பி வைக்கிறேன். 

இப்படி ஒரு ஐந்தாறு கலைஞர்கள் பற்றி காலை ஆறு மணியிலிருந்து பத்து மணி வரை உரையாற்றினேன்.  கோபி கிருஷ்ணன் பற்றி மட்டும் எட்டு மணி நேரம்.  இரண்டு பிரிவாக. 

தி. ஜானகிராமனின் நாவல்களையும் இளம் வயதில் தொலைத்து விட்டேன்.  அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எம்.வி. வெங்கட்ராம், நகுலன், எஸ். சம்பத், கு.ப. ராஜகோபாலன், கரிச்சான் குஞ்சு போல தி.ஜா. என்னை ஈர்க்கவில்லை.  மரப்பசு கூட என்னை சலனப்படுத்தவில்லை.  பிறகுதான் எனக்குள் நிகழ்ந்த ஏதோ ஒரு மாற்றத்தினால் நானாகவே தி.ஜா.வைப் படிக்க ஆரம்பித்தேன்.  அதற்குப் பிறகு நடந்தது ஒரு ஆன்மீகப் புத்தெழுச்சி.  ஒரு இறை தரிசனம்.  கடவுளைக் கண்டு விட்டவனைப் போல் உணர்ந்தேன்.  இரண்டு இரண்டு முறை படித்தேன்.  சில பகுதிகளை மீண்டும் மீண்டும் படித்தேன்.  மோகமுள் அப்படி ஒரு தரிசனத்தை அளித்த மகத்தான படைப்பு. 

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai