கே:| நீங்கள் வாசித்ததில் (வாழ்ந்ததில்) எந்த கதாபாத்திரத்தை நீங்கள் அதிகம் விரும்பியது?
இந்தக் கதாபாத்திரத்தை போன்று ஒரு கதாபாத்திரம் எழுத வேண்டும் என விரும்பிய தருணம்? காரணம்?
ரஞ்சித் சின்னுசாமி
அந்தியூர்
பதில்: வாசித்ததில் அதிகம் விரும்பியது மரியோ பர்கஸ் யோசாவின் Feast of the Goat நாவலில் வரும் கதைசொல்லியான உரானியா காப்ரால் என்ற பெண். யோசாவின் நாவல்களில் வரும் கதைசொல்லிகள் அநேகமாக ஆண்களாகவே இருப்பார்கள். வித்தியாசமாக இந்த நாவலில் பெண் வருகிறாள். எந்த ஜென்மத்திலும் மறக்கவே முடியாத பெண். ஒரு சர்வாதிகாரியையே வீழ்த்திய 13 வயதுப் பெண்.
வாழ்ந்தது, வாழ்ந்து கொண்டிருப்பது ஸோர்பா.
உங்களுடைய அடுத்த கேள்விக்கும் பதில் ஸோர்பாதான். காரணம், கொண்டாட்டம். வாழ்க்கை அழுகைக்கானது அல்ல. கொண்டாட்டத்திற்கானது.