என் நண்பர் வினித் ஒரு வினாவை எழுப்பி இருக்கிறார். பாராளுமன்றத்துக்குள் போய் வில்லனைப் போடுவதும் நகரத்தின் நடுவே பீரங்கியைப் பயன்படுத்துவதும் ஒன்றுதான் என்கிறார் வினித். வினித்துக்கு ஒன்று புரியவில்லை. விக்ரம் ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன் படம். அதை லௌகீக தர்க்கம் கொண்டு பார்க்கலாகாது. விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளைப் பார்த்தாலே அது ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன் படம் என்று புரியவில்லையா? மேலும், விக்ரம் படத்தில் நகரம் எங்கே வருகிறது? நரகம் வருகிறது. ஆனால் நகரம் வ்ரவே இல்லை. செண்ட்ரல் ஸ்டேஷன் முகப்பைக் காண்பிக்காத வரை நீங்கள் நகரம் என்று சொல்லவே முடியாது. இன்னும் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். எனக்கு விக்ரம் பற்றி பாராட்டிப் பேசவும் சொல்லவும் இன்னும் நிறைய இருக்கிறது. வாருங்கள்.