யூதாஸ் நாவலை வாசிப்பது எப்படி? (3)

ஜூடும் கியாராவும் ஒருநாள் டாக்கைப் பார்க்கச் செல்கிறார்கள்.  டாக் ஒரு வயதான பாதிரியார்.  பார்க்கச் செல்லும் போது டாக்கின் இல்லத்தில் வெர்தியின் நபூக்கோ என்ற ஆப்பராவில் இடம் பெறும் எபிரேய அடிமைகளின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

டாக் தனது இறப்புத் திருப்பலியின் இறுதியில் இதை வாசிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் என்று கியாராவிடம் சொல்கிறான் ஜூட்.  அந்தப் பாடலைக் கேட்கும் போது கியாராவின் மனதிலிருந்த பாரம் இறங்குவது போல் தோன்றுகிறது. 

இப்படியான பல உள்மடிப்புகளைக் கொண்டதாக இருக்கிறது யூதாஸ்.  இந்த நாவலின் ஊடாக ஓடிக் கொண்டிருக்கும் இசை பற்றிய பல குறிப்புகள் நாவல் பிரதியில் ஓர் உப பிரதியாக இயங்குகிறது.

பின்வருவது வெர்தி இயற்றிய நபூக்கோ ஆப்பராவில் இடம் பெறும் அடிமைகளின் கோரஸ்.