ஆட்டோஃபிக்‌ஷனிலிருந்து பயோஃபிக்‌ஷனுக்கு…

Dear Charu,
Hope you are doing well. 
‘காலமும் வெளியும்’ படித்தேன். உங்களிடம் இதைப் பற்றிப் பேசவேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். இப்போது வாய்ப்பு அமைந்துவிட்டது. 
தேகம், ஸீரோ டிகிரி, ராஸலீலா போன்ற நாவல்களிலிருந்து, நான்தான் ஒளரங்ஸேப், தியாகராஜா, அசோகா போன்ற நாவல்களுக்கு நீங்கள் வரும்போது, அங்கு ஒரு paradigm shift நடக்கிறது. இந்த shift-ஐ themes மூலமாக அணுகுவதற்குப் பதிலாக genre மூலமாக அணுகுவது, உங்கள் எழுத்தை உள்வாங்கிக் கொள்ள மேலும் உதவும் என்று நம்புகிறேன்.
அந்த வகையில், நீங்கள் autofiction-ல் இருந்து biofiction-க்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Biofiction என்னும் கருத்துருவாக்கத்தை ஃப்ரெஞ்ச் விமர்சகர் Alain Buisine போகிற போக்கில் ஏதோ ஒரு கட்டுரையில் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதை அவர் நன்றாக விளக்கவோ விவரிக்கவோ இல்லை. Michael Lackey, Alexandre Gefen போன்ற விமர்சகர்கள், பயோஃபிக்ஷனின் முக்கியத்துவத்தையும் தேவையையும் பற்றி இப்போது நிறைய எழுதி வருகின்றனர், என்றாலும், இதைப் புரிந்துகொள்வதில் சில குழப்பங்கள் நிலவி வருகின்றன. 
சரித்திரத்தில் வாழ்ந்த ஒரு நபரை, அவருடைய வாழ்க்கையின் எல்லா கூறுகளோடும் எடுத்துக்கொண்டு, அவருக்கு ஒரு கற்பனையான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கும் நாவலை பயோஃபிக்ஷன் என்று மிகச் சுருக்கமாக வகைப்படுத்தலாம். 
இந்தப் போக்கு விமர்சனத்திற்குள்ளாவது எதிர்பார்த்த ஒன்றே. பயோஃபிக்ஷன் எழுதுவது எழுத்தாளரின் கற்பனை வறட்சி என்ற விமர்சனம் கூட உள்ளது. 
இந்தப் புரிதலுக்குக் காரணம், பயோஃபிக்ஷனை பயோக்ராஃபியாக அணுகுவதுதான். ஆனால், பயோக்ராஃபிக்கு உள்ள எல்லாக் கட்டுப்பாடுகளையும் தகர்த்துவிடுவதால், ஒரு பயோஃபிக்ஷன் சரித்திரத்தைப் பின்நவீனப்படுத்துகிறது, நிகழ்காலப்படுத்துகிறது. 
மேலும், எழுத்தாளரின் பார்வையைச் சார்ந்திருப்பதால், வரலாற்றில் நிலவிய அதிகாரக் கட்டமைப்புகள் பற்றியும், வரலாற்றால் மறைக்கப்பட்ட/ திரிக்கப்பட்ட மனிதர்கள் பற்றியும், பயோஃபிக்ஷன் ஒரு புனைவாக, இன்றைய வாசிப்பு கலாசாரப் பரப்பில் முன்வைக்கிறது. மேலே சொன்ன விமர்சனத்திற்கு மாறாக, அது கற்பனையை முன்னெடுக்கிறது, தன் எல்லையை விரிவுபடுத்துகிறது. 
இதை Michael Lackey, தம்முடைய Biofiction: An Introduction என்னும் நூலில், ஒரு Cultural Intervention என்று குறிப்பிடுகிறார். 
“Biofiction is valuable not so much because it gives readers an accurate picture of a person from the past but because it transforms the story of a person from the past into a symbol or metaphor that could be used to understand certain structures of thinking and being that were at work in the past and continue to function in the present and are likely to do so in the future. But it is also valuable because the author intervenes in the culture by offering readers a way to disable or to overcome the oppressive and debilitating structures and to recreate the polity in a healthier and more just way”. (p. 137)
பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் எழுதப்படும் பூர்ஷ்வா பயோஃபிக்ஷன்களைக் காட்டிலும், நம் இலக்கியங்களுக்கு, இயல்பாகவே allegorical தன்மை அதிகம் என்றே நான் புரிந்துகொள்கிறேன். எனவே, ஆட்டோஃபிக்ஷனிலிருந்து பயோஃபிக்ஷனுக்கு நகரும் உங்கள் trajectory- ஐ உலக இலக்கியப் போக்குடன் ஒப்பிட்டுப் புரிந்துகொண்டால், அதன் முக்கியத்துவம் தெரிகிறது, சாரு. 
Looking forward to reading the upcoming novels. 
Love, 

என். ஈஷ்வர்