அழுகல் முட்டை படித்தேன். அந்தக் குறிப்பிட்ட ஸூம் மீட்டிங்கையும் கேட்டேன். கடும் கோபம் ஏற்பட்டது. இந்தக் கண்றாவியையெல்லாம் எப்படி நீங்கள் சகித்துக் கொள்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. இத்தனை பொறுமைசாலியான ஒரு மனிதரை என் வாழ்வில் நான் சந்தித்ததில்லை. இனியும் சந்திக்க முடியும் என்று தோன்றவில்லை. ஒன்றும் தெரியாத மூடர்கள்தான் சத்தம் போடுவார்கள். அதைத்தான் அந்த அரைவேக்காடுகள் செய்திருக்கின்றன.
Algebra conversations interview was the first interview of yours I watched, got impressed and there I started to follow you… now I am here, charu
ஸ்ரீ
வணக்கம் சார், வாசித்தேன். வருத்தமுற்றேன். நள்ளிரவில் உறக்கம் கலைந்து எழுந்தமர்ந்து எழுதுகிறேன்.
எழுதுகிறவனுக்குத் தமிழ்ச் சமூகத்திடமிருந்து அவமதிப்பைத் தவிர வேறெதுவும் கிடைக்காது. இதில் சிறியவர் பெரியவர் பேதம் இல்லை. இது அவமதிப்பென்று கூட அவர்களுக்குப் புரியாது.
எழுதியவரே விருந்தினராகக் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்வில் விவாதங்கள் எந்த எல்லைவரை செல்லவேண்டும் என்கிற நெறிமுறைகள் நமக்குக் கற்றுக்கொடுக்கப்படவில்லை. ஓர் ஆசிரியன் அமைந்து அவன் தாள் பணிந்து அறிந்துகொள்ளவேண்டியது அநேகம். தனக்கென்று ஓர் ஆசிரியன் அமையாத வாசகன் இலக்கிய அநாதை.
உங்கள் ஆளுமை, அனுபவம், வயது, மனநிலை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு இதுபோன்ற உதிரி நிகழ்வுகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருங்கள். எல்லா மூத்த எழுத்தாளர்களுக்குமே நான் இதைப் பரிந்துரைக்கிறேன்.
செல்வேந்திரன்
அழுகல் முட்டை படித்தேன். சான்ஸே இல்லை. You are a monster. இதுவே ஒரு சிறுகதை போல் இருக்கிறது. thank you for introducing this Ludovico Einaudi’s Divenire.
புவனேஸ்வரி