ஹெட் மஸாஜ் பற்றி வளன்

நான் போன ஜென்மத்தில் தாய்லாந்தில் பிறந்து ஆயிரக்கணக்கானோருக்கு மஸாஜ் செய்து விட்டுக் கொண்டிருந்தேன் போலிருக்கிறது. வளன் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த பதிவைப் பாருங்கள்:

ஆட்டோஃபிக்ஷன் வகைமையில் நிஜத்துக்கும் கற்பனைக்குமான எல்லைக்கோடுகள் இல்லாமல் போனாலும் வாசக மனம் எது உண்மை எது புனைவு என்பதை தேடிக்கொண்டேயிருக்கும். இந்தக் கதையில் வரும் கோவிந்தன் யார் என்பதை மனம் தேடிக்கொண்டேயிருக்கிறது. அதேபோல இந்த ஹேட்மசாஜ் எனக்கும் கிடைத்திருக்கிறது. தரையில் கால் மடித்து உட்கார முடியாததால் அன்று சாரு வீட்டில் நான் படுத்தவாக்கிலேயே பேசிக் கொண்டிருந்தேன். நானும் அராத்துவும் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது சாரு அருகில் அமர்ந்தபடி என் தலைக்கு மசாஜ் கொடுத்துக் கொண்டிருந்தார். வாழ்வில் மறக்கவே முடியாத அனுபவம். ஆக இந்த ஹெட்மசாஜ் உண்மை என்று தெரிகிறது. ஆனால் பச்சைக் கண் கற்பனையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. வாசிப்பின்பம் என்னவென்று தெரிய இந்தக் கதையை வாசியுங்கள். சாருவுக்கும் சாமானியர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்: சாமானியர்கள் அபத்தத்தை சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள், சாரு அதை சுட்டிக் காட்டுவதோடு கலையாக மாற்றிவிடுகிறார்.

http://charuonline.com/blog/?p=12402

http://charuonline.com/blog/?p=12408

(அடப்பாவி, மஸாஜ் உண்மையாம், பச்சைக் கண் கற்பனையாம்! நான்தான் எல்லாமே கற்பனை என்று சொல்லியிருக்கிறேனே? – சாரு!)