யோகப் பயிற்சி முகாம்

ஜெயமோகன் தளத்தில் இருந்து:

நண்பர்களுக்கு வணக்கம்.

வரும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 (வெள்ளி, சனி, ஞாயிறு) நாட்களில் ஒரு யோகப்பயிற்சி முகாம் ஒருங்கிணைக்கப்படுகிறது. கட்டணம் உண்டு

பங்கெடுக்க விரும்புபவர்கள் jeyamohan.writerpoet@gmail.com  என்னும் முகவரிக்கு எழுதலாம். பெயர், தொலைபேசி எண், ஊர், வயது, நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்களா? ஆகிய தகவல்களுடன் எழுதலாம்

*

யோகப்பயிற்சிகள் சார்ந்த எண்ணற்ற பள்ளிகள் இன்று உலகம் முழுவதும் இருந்தாலும், வெகு சில மரபார்ந்த கல்விநிலைகள் மட்டுமே, இந்த துறையில் நீண்ட ஆய்வுகளை செய்து அவற்றை தொடர்ந்து மேம்படுத்தி இன்று வரை சரியான பாடத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

இந்த துறையில்  உலகளவில் இரண்டு விதமான பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஒன்று உடலியல், மற்றும் நோய்க்கூறு சார்ந்த பாடம், { NON TRADITIONAL YOGA}மற்றொன்று மரபார்ந்த பார்வையும், நவீன அறிவியலுக்கு அணுக்கமான ஆய்வுகளையும் உள்ளடக்கிய பாடத்திட்டம் { TRADITIONAL YOGA  }

இந்த முகாமில்  மேலே சொல்லப்படட இரண்டு பாடத்திட்டங்களளின்  அடிப்படைகள் அவற்றை ஒட்டிய பயிற்சிகள், அதன் சாதக பாதகங்கள், அதில் நமக்கு தேவையான பயிற்சிகள் என ஒரு விரிவான பார்வையை முன்வைத்து சிலவற்றை கற்றுக்கொள்ளலாம்

இந்த வகை பயிற்சிகள் எந்த வித பக்கவிளைவுகளுமின்றி , பெரியவர்கள் அனைவருக்குமாக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே யோகப்பயிற்சியில் இருப்பவர்கள், குறிப்பிட்ட நோய்க்கூறு இருப்பவர்கள் அல்லது மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் அடிப்படையான மனம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் .

இந்த மூன்று நாள் முகாமில்

அடிப்படையான 10 ஆசனப்பயிற்சிகள்

3 விதமான பிராணாயாம பயிற்சிகள்

பிரத்யாஹார / தியான அடிப்படைகள்

என மொத்தம் ஆறு அமர்வுகள் / வகுப்புகள் நடத்தப்படும்.  பங்குபெறும் ஒருவர் அனைத்திலும் கலந்துகொள்ள வேண்டும்.

முகாமில் யோக பயிற்சியுடன் பரிந்துரைக்கப்படும் உணவுத்திட்டம் பின்பற்றப்படும்.

நடத்துபவர்

சௌந்தர் ராஜன் 

17 வருடங்களாக  யோக வகுப்புகள் நடத்தி வருகிறார். சுவாமி சிவானந்தர் {ரிஷிகேஷ்} மரபில்  குருகுல கல்வி முறையில் கற்றவர் .மற்றும்  பிஹார் யோக பள்ளியிலும்  பயின்றவர்.

பொதிகை தொலைக்காட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக யோகம் சார்ந்த தொடர் நிகழ்ச்சிளை நடத்தி வருகிறார்.