கற்றுக் கொண்டது…

அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,

வைதேகி, கொக்கரக்கோ, உலகளந்தான், பச்சைக்கண், தண்ணீர், அரக்கோணம், பூனை, ஆடு, அமைப்பு முக்கியமாக “போடீ சு**” இவை அனைத்தும் நான் படித்து முடித்த பன்னிரண்டு மணி நேரத்தில் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கும் வார்த்தைகள்.

வைதேகி – அன்பின் நேர்மறையும் எதிர்மறையும். 

கொக்கரக்கோ – இவ்வளவு தானே, இதுக்கேன்டா இவ்வளவு பொங்குறீங்க? அன்போ அறிவோ சரியா வேலை செஞ்சாதான்டா முழுமையாகும். உணர்ச்சியால் பொங்கி ஏன்டா மத்தவன் வாழ்க்கைய நாசமாக்குறீங்க என்கிற ‘Rationality’ன் முகம்.

போடீ சு** – உள் அமைதிக்கான குறுக்கு வழி.

சாரு, அன்பு நாவலில் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், அன்பு எவ்வளவு முக்கியமோ அதை சரியாக வெளிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். அன்பாக இருக்கிறேன் என்ற பெயரில் முட்டாள்தனமாக நடக்க கூடாது. அன்பு செய்ய அவ்வுணர்வு பொங்கினால் மட்டும் போதாது; சரியாக செய்ய கொக்கரக்கோ போல் கட்டயாமாக அறிவு இருந்தாக வேண்டும் இல்லையெனில் சூ** மூடிட்டு இருக்க வேண்டும். தேவையில்லாமல் குடைய கூடாது.
இது என் வாழ்வில் மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது. வாசகனாக நான் கொக்கரக்கோ போல் வாழ முடிவெடுக்கிறேன். மற்றவர்களிடம் இருந்து என்னை காக்க ‘போடீ சு**’ என்னும் மந்திரம் போதும்.

இப்போது முகமூடிகளின் பள்ளத்தாக்கு வாசித்துக் கொண்டிருக்கிறேன். 
நன்றி சாரு. எதற்கு எதிராக உங்கள் எழுத்து இருக்கிறதோ அவற்றால் உங்கள் வாழ்வு தினமும் சந்திக்கும் பிரச்சினைகளை வாசிக்கும் போது மனம் கவலை அடைந்தது. நாவலை வாசிக்கும் போது நேரம் சென்றதே தெரியவில்லை.

அமோரி