காதை அறுத்துக் கொடுத்த வான்கோவும் அடியேனும்…

இப்போது நான் இங்கே எழுதப் போவதை அன்பு நாவலைப் படித்த யாரேனும்தான் எழுதியிருக்க வேண்டும். யாரும் எழுதவில்லை. அதனால் நான் எழுதத் துணிந்தேன். மேலும், எது எழுதினாலும் அதை எழுதிய பிறகு அந்த சிருஷ்டி – அந்தப் பிரதி – எழுதிய நபருக்கு அந்நியமாகத்தானே போகிறது? அந்த வகையிலும் இப்போது நான் எழுதுவதை எடுத்துக் கொள்ளலாம்.

வான்கோ தன் காதலிக்காகத் தன்னுடைய ஒரு காதை அறுத்துக் கொடுத்தான் என்ற செய்தியைக் கேள்விப்படாதவர் இருக்க முடியாது. அந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்று சிலராவது படித்திருப்பார்கள். ஒரு வேசியிடம் வான்கோ அடிக்கடி செல்வது வழக்கம். கலைஞர்களுக்கே உரித்தான பாணியில் அவளிடம் எப்போதும் தன் காதலைத் தெரிவிப்பதும் அவன் வழக்கம். அவளோ வேசித் தொழில் செய்பவள். அவள் ஒருநாள் கேட்டாள், என்னவோ காதல் காதல் என்கிறாயே, காதலுக்காகக் காதை அறுத்துக் கொடு என்றால் கொடுப்பாயா?

அவளிடமிருந்து தன் ஓட்டல் அறைக்குத் திரும்பிய வான்கோ தன்னுடைய ஒரு காதை அறுத்து ஒரு ப்ளேட்டில் வைத்து, துணியால் மூடி, ஓட்டல் சிப்பந்தியிடம் விலாசத்தைக் கொடுத்து அனுப்பி விட்டான். அவளும் தனக்கு வந்து சேர்ந்த தட்டை கவனிக்கவில்லை. காலையில் அறைக் கதவைத் தட்டிய ஓட்டல் பணியாளன் தான் அறையின் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த வான்கோவைக் கண்டான். இன்னும் சில நிமிடங்கள் தாமதமாகியிருந்தாலும் வான்கோவை உயிரோடு மீட்டிருக்க முடியாது.

ஒரு பெண்ணின் மீது கொண்ட அன்புக்காக வான்கோ அந்தப் பைத்தியக்காரத்தனமான செயலைச் செய்தான்.

நான் அன்பு நாவலை எழுதினேன். இதன் விளைவாக என் தனிப்பட்ட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்படலாம். வான்கோவின் காதை விட அதிக சேதங்கள் விளையலாம். அன்பு நாவலைப் படித்தால் நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்கு விளங்கும்.

நான் எழுதிய அத்தனை நூல்களையும் என் காலத்துக்குப் பிறகு நீங்கள் படிக்கலாம். ஆனால் அன்பு நாவலை நான் இருக்கும்போதே படித்து விடுங்கள். நாவலைப் படித்தால் நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்கு விளங்கும்.

அன்பு நாவலைப் படித்த கார்ப்பெண்டர் தக்ஷிணாமூர்த்தி பின்வருமாறு எழுதியிருக்கிறார்:

சாரு “அன்பு” நாவலோட 135 வது பக்கத்துல  இருக்கேன்.எப்படி சொல்றதுனே தெரியல .ஆனா இப்ப இந்த மனநிலைல சொல்லாம விட்டா அவ்ளோதான்.

எனக்கு ரொம்பப் பிடிச்ச எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் அவர்கள்.மொதல்ல நான் உங்ஙளுக்கு அனுப்பின மெயிலே லா.ச.ரா பத்தி நீங்க பழுப்பு நிறப் பக்கங்களல்ல எழுதினதப் படிச்ச பிறகுதான். எனக்கு உயிர் அவரு.

இந்த அன்பு ஒரு பின் நவீனத்துவ வாதியின் மறுசீராய்வு மனு நாவல் ஒரு சாதாரண மனுஷனால எழுதவே முடியாது.இது சாத்தியமே இல்ல.எனக்கு இப்ப உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சி.ரெண்டு நாளா கண்ணு ஒரே வலி. வேலைல கண்ல மரத்தூள் அடிச்சிருச்சி. ஆனா இந்த நாவலை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சதும் எல்லா வலியும் போய்டுச்சி .கீழ வைக்கவே முடியல.126 ஆம் பக்கத்துல நீங்க நேரடியா திடீர்னு பேசினது இன்னும் பெரிய்ய அதிர்ச்சி.

லா.ச.ரா வோட சில சிறுகதைகள் படிச்சி ஜூரம் வந்து உடம்பு சரியில்லாம போயிருக்கு அதுக்குப் பிறகு இந்த நாவல்லதான் இப்படி ஒரு பதட்டமும் ,அதிர்ச்சியும்.படிக்கிற எங்களுக்கே இப்படி இருக்குன்னா இதை எந்த மாதிரியான மன நிலைல நீங்க எழுதியிருப்பீங்க.உங்க உடம்பு என்ன இரும்பாலயா செஞ்சிருக்கு….
நீங்க நல்லா இருக்கனும்னு நான் குன்றத்தூர் முருகனை வேண்டிக்கிறேன் நைனா…..லவ் யூ..லவ் யூ..லவ் யூ..லவ் யூ..லவ் யூ…லவ் யூ.லவ் யூ.லவ் யூ.லவ் யூ..லவ் யூ..லவ் யூ..லவ் யூ..லவ் யூ..லவ் யூ..லவ் யூ..லவ் யூ..லவ் யூ….

தக்ஷிணாமூர்த்தி

நாவல் வாங்குவதற்கான விவரம்:

https://tinyurl.com/yhvc8ush