நிரந்தரமாக ஒத்தி வைக்கப்படும் இறுதித் தீர்ப்பு: அன்பு நாவல் குறித்து சக்திவேல்

hஅன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நாவலைப் பற்றிய சக்திவேலின் மதிப்புரை மயிர் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. இனி வரும் காலத்தில் சக்திவேல் முக்கியமான எழுத்தாளராக வருவார் என்று முன்னறிவிக்கிறேன். என் முன்னறிவிப்புகள் ஒருபோதும் தவறியதில்லை. நாவலைப் பாராட்டி விட்டார் என்பதற்காக அல்ல; மதிப்புரையில் ஒரு parable வருகிறது. இது போன்ற குட்டி நீதிக்கதைகளை ஃப்ரெஞ்சில் சியோரன் எழுதுவார். சக்திவேல் அந்தக் கதையைத் தனியாகவே எழுதியிருக்கலாம். எழுதியிருந்தால் அது அவரது புனைவு எழுத்தில் வரவு வைக்கப்பட்டிருக்கும். என்னைப் போலவே அ-புனைவில் சேர்த்து விட்டார். இப்படித்தான் நான் எண்பதுக்கும் மேற்பட்ட அ-புனைவு நூல்கள் எழுதியிருக்கிறேன். அந்த விஷயங்களைக் கொண்டு நான் இருபது நாவல்களை எழுதியிருப்பேன். கோணல் பக்கங்கள் தொகுதிகள் அனைத்தும் புனைவு நூல்களாக எழுதப்பட்டிருக்க வேண்டியவை. மதிப்புரையில் “தட்டையான” என்று ஒரு வார்த்தை வருகிறது. அது ஒரு நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டை விமர்சித்து நான் ஏராளமாக எழுதியிருக்கிறேன் என்பதால் இங்கே எதுவும் வேண்டாம். மேலும், மதிப்புரைகளை மதிப்புரைகளாகவே கொண்டாட வேண்டும். மதிப்புரைக்கு மதிப்புரையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கக் கூடாது. நான் இப்போது நான்கு தொகுதிகளுக்கான எடிட்டிங் வேலையில் இருக்கிறேன். பூச்சி தொகுதிகள். இன்னும் இரண்டு வாரத்தில் நான்கு தொகுதிகளும் விற்பனைக்கு வரும். புனைவும் அ-புனைவும் கலந்த ஒருவித autonarrative தொகுப்பு.

அன்பு நாவல் குறித்த சக்திவேலின் மதிப்புரை கீழே:

https://mayir.in/essays/%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d/2847/