இங்கே தமிழ்நாட்டில் படிக்காதவர் பாமரர் அல்ல; அவருக்காவது கொஞ்சூண்டு காமன்சென்ஸ் உள்ளது. இங்கே பாமரர் என்ற பிரிவுக்குள் வருபவர்கள் பெரும்பாலும் புத்திஜீவிகளும் பேராசிரியர்களும் சில பத்திரிகையாளர்களுமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பாமரர் என் பெயரைக் குறிப்பிட்டு தமிழ் இந்து தினசரியில் அவதூறாக எழுதியிருந்தார். அதேபோல் ஒரு பேராசிரியரும் அடிமட்டித்தனமாக எழுதியிருந்தார். இருவருக்கும் பதில் கூறுவது என் வேலையல்ல, நான் இரண்டு நாவல்களை இப்போது ஒரே நேரத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த மூடர்களுக்கு பதில் சொல்ல நேரமும் இல்லை. ஆனால் ஜெயமோகன் எழுதுவார் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால், அவர் எப்போதுமே ஒரு களப்போராளி போல் இந்த மட்டி மடையர்களோடு போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் எழுதியதையே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டு அவர் கட்டுரையை இங்கே பகிர்கிறேன்.
பாமரர்களும் பேராசிரியர்களும் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)