ஆட்டைப் புணர்ந்தது போல் இருந்தது அந்தக் கதை. ஆட்டைப் புணர்வது வக்கிரத்தில் வரும். ஆனால் அதையே ஒருத்தன் ஆட்டின் ஆசன வாய்க்கு ஒரு வர்ணனை, அதன் மடிக்கு ஒரு வர்ணனை, அதன் மூஞ்சிக்கு ஒரு வர்ணனை என்று வர்ணித்து வர்ணித்து எழுதினான் என்றால் அதை fetishஇன் உச்சக்கட்டம் என்றுதானே சொல்வீர்கள்? சில வெளிநாடுகளில் கக்கூஸ் மாதிரி ரெஸ்டாரண்ட் கட்டி அங்கே சாப்பிடுகிறார்கள். ஒரு இணைய வேசி தன் அபானவாயுவைப் பிடித்து என்.எஃப்.டி.யில் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கிறாள். இதெல்லாம்தான் fetish. அந்த மாதிரி ஃபெட்டிஷ் கதைதான் அதுவும்.
கதையில் வரும் கடைசிப் பகுதி எப்படி இருக்கிறது தெரியுமா? ரஜினி திடீரென்று செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தி விடுவார். அதுவும் எப்படி? வடிவேலு அடிக்கும் மட்டமான செக்ஸ் ஜோக்கை ரசித்துக் கொண்டும், மீனாவுடன் டூயட் பாடிக் கொண்டும். அந்த மாதிரிதான் நம்முடைய கதையின் நாயகனுக்கும் கடைசிக் காட்சியில் ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் நடக்கிறது. ”ஏன்யா, ரஜினி சொடக்கு போடும் நேரத்தில் சந்திர மண்டலம் போகும் வழியைக் கண்டு பிடிக்கும் போது நம் கதை நாயகனுக்கும் ஏதாவது ஒரு அதிசயம் நிகழக் கூடாதா? மேஜிகல் ரியலிஸம் என்ன மயிருக்கு இருக்கிறது?” என்று நினைத்திருப்பார் போல கதாசிரியர்.
இந்தக் கதையைப் போய் தமிழகமே கொண்டாடுகிறது என்றால், நான் செல்லும் வழி மிகச் சரியான வழி என்றே சொல்லத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் போலிச் சரக்குகளுக்குத்தான் என்றைக்கும் மவுசு இருக்கிறது. உண்மையான கலை என்ன செய்யும் தெரியுமா? நாடி நரம்பையெல்லாம் துடிதுடிக்கச் செய்து விடும். சமயங்களில் அதை எழுதியவனைக் கொன்று போடத் தோன்றும். உங்கள் நம்பிக்கைகளை அதிரச் செய்வதுதான் கலை. உங்களுடைய மென்னுணர்வுகளை வருடிக் கொடுப்பது கலை அல்ல. அதைச் செய்வதற்கு தாய்லாந்து பாலியல் தொழிலாளிகள் இருக்கிறார்கள். காசு கொடுத்தால் கையையோ வாயையோ வைத்து சுகம் கொடுப்பார்கள். இந்த மாதிரி இண்டலெக்சுவல் ப்ளோஜாப் செய்து நெகிழ வைப்பது கலை அல்ல.