கடந்த புத்தக விழாவின் போது ஒரு பிரபலமான பெண்மணி என்னையே சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு தன் தோழியிடம் எனக்கும் கேட்கிறாற்போலவே “பார், சாருவின் கன்னம் எப்படி மின்னுகிறதென்று?” என்றார். மற்றவர்களாக இருந்தால் ஹி ஹி என்று வழிவார்கள். நான் வேறு மாதிரி வழிந்தேன். “எனக்காவது கன்னம் மட்டும்தான் மின்னுகிறது. உங்களுக்கோ முழு தேகமே மின்னுகிறதே?” என்றேன். அப்போது அவர் பார்த்த ஒரு பார்வைக்கு இந்த உலகத்தையே தூக்கிக் கொடுத்து விடலாம். ஆனால் அவருடைய தொலைபேசி எண்ணை நான் கேட்கவில்லை என்பது முக்கியம். இனிமேல் அடுத்த புத்தக விழாவின்போதுதான் அவரைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
பெண்கள் என்னிடம் வழிந்தால் நானும் வழிவேன் என்று அருஞ்சொல் நேர்காணலில் ஒரு இடத்தில் வருகிறது. அந்த இடத்தில் மேற்கண்ட உதாரணமும் வந்திருக்க வேண்டும். விடுபட்டு விட்டது. படித்துப் பாருங்கள். சமீப காலமாக என்னை எதற்குமே பாராட்டாத டார்ச்சர் கோவிந்தனே அமேஸிங் என்றார்.