***
என் நாவல் ஒன்று சமீபத்தில் ஒரு அமெரிக்கப் பதிப்பக நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்கள் வெளியிட்ட குறும்பட்டியலில் என் நாவலும் இருந்தது. விஷயம் வெளிவந்து பத்து நாள் இருக்கும். அதை நான் எந்த அளவுக்கு மதிக்கவில்லை என்றால், இங்கே என் தளத்தில் அந்தச் செய்தியையே நான் வெளியிடவில்லை. இதிலிருந்தே நான் அந்தச் செய்தியை மதிக்கவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஏன் மதிக்கவில்லை என்றால், இதேபோல் பல முறை என் நாவல்கள் குறும்பட்டியல்களில் இடம் பெற்று கடைசிப் போட்டியில் தோல்வி அடைந்து விடுகிறது. காரணம், இடையில் சில பேர் அவர்களிடம் போய் என்னைப் பற்றி அவதூறு செய்து விடுகிறார்கள். அவர்களும் பயந்து போய் எதுக்கு வம்பு என்று பின்வாங்கி விடுகிறார்கள்.
நான் இறை நம்பிக்கை உள்ளவன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் வந்து “பெரிய இடத்தில் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள்; கவனமாக இருங்கள்” என்று எச்சரிக்கை செய்தார். நண்பர் சாதாரண ஆள் அல்ல. எம்.பி. அப்போதுதான் மணி ரத்னத்தின் சகோதரர் ஒருவர் இமயமலைக்குச் சென்றவர் சிறுநீர் கழிக்கச் சென்று மலை முகடிலிருந்து கீழே விழுந்து இறந்து போனார். அந்தச் சம்பவம் என்னை வெகுவாக பாதித்திருந்தது. அப்போதுதான் என் உறவுக்காரர் வீட்டில் ஒரு மூன்று வயது குழந்தை வேறு சோறு ஊட்டப்படும்போது விக்கல் எடுத்து செத்திருந்தது. நான் எம்.பி. நண்பரிடம் சொன்னேன், மக்கள் விக்கல் எடுத்தெல்லாம் சாகிறார்கள். எனக்கு சாவு அந்த இடத்திலிருந்துதான் என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது, உங்கள் அன்புக்கு நன்றி என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
எது கிடைக்குமோ அது கிடைக்கும். எனவே எப்போதெல்லாம் என் நாவல் சர்வதேசப் பரிசுக்கான குறும்பட்டியலில் இடம் பெறுகிறதோ அப்போதெல்லாம் அவர்களிடம் என்னைப் பற்றி அவதூறு பரப்பி அந்தப் பரிசை கெடுக்கும் நண்பர் யார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அவர் என் வாழ்வில் கடவுளால் அனுப்பப்பட்டவர். எனவே அவர் மீது எனக்குக் கோபமே இல்லை.
குறும்பட்டியலில் இடம் பெற்ற என் நாவல் அந்த அமெரிக்கப் பதிப்பகத்தினால் வெளியிடப்படும். உலகம் பூராவும் என் எழுத்து பரவும். அந்த வாய்ப்பு இப்போது இல்லை. அதற்குள் என்னைப் பற்றிய அவதூறு செய்தி அங்கே அமெரிக்காவுக்குப் போய் விட்டது. அந்த நாவலை மொழிபெயர்த்தது என் அன்புத் தோழி நந்தினி கிருஷ்ணன். அவர்தான் என்னுடைய மற்றொரு நாவலான ஔரங்ஸேபையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
நந்தினிக்கும் அந்த அமெரிக்க நிறுவனத்துக்கும்தான் கடிதத் தொடர்பு இருந்தது. நான் சம்பந்தப்படவில்லை. பத்து நாள்களுக்கு முன்னால் நந்தினி எனக்கு ஃபோன் செய்து குறும்பட்டியலில் அவர் மொழிபெயர்த்த என் நாவல் இடம் பெற்றிருப்பதை உலக மகா சந்தோஷத்துடன் சொன்னபோது நான் எந்த சுரத்தும் இல்லாமல் அப்டியா என்றேன். நந்தினிக்கு என் மீது செம கோபம். ஏன் நான் சுரத்தில்லாமல் சொன்னேன் என்றால், மேலே சொன்ன காரணம்தான். குறும்பட்டியலில் இடம் பெற்றது பற்றி என் நண்பர் அ. முத்துலிங்கம் எனக்கு வாழ்த்து அனுப்பினார். நன்றி சொல்லி பதில் அனுப்பினேன். அதற்குப் பிறகும் கூட அது பற்றி என் ப்ளாகில் நான் எழுதவில்லை.
இப்போது நந்தினி இது பற்றி ட்வீட் செய்திருப்பதால் அந்த ட்வீட்டுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
கீழே ஆங்கிலத்தில் உள்ளது அனைத்தும் நந்தினியின் ட்வீட்.
I’m breaking social media silence to talk about something awful that happened to me recently. I was recently shortlisted twice for a translation prize – a Tamil translation and Urdu translation by me are in competition with each other.
Except I also got a congratulatory email telling me I had actually won, but to please keep it to myself until the shortlist was announced on April 3 and the winner on April 10.
Among those who knew was the editor of a prestigious online platform, on which an excerpt from the winning work was to be published, which signed a contract with me and made arrangements to pay for the excerpt.
Then, I got an email on April 6 from the jury chair, asking me about specific passages I had mentioned in my application, which it had belatedly occurred to them they might want to read before making the prize announcement.
I worked through the weekend to get it ready – they wanted it latest by April 10 – and then got an email two days later, my only acknowledgement of the receipt of the excerpts, claiming the jury (which comprises seven members) has read the new excerpts and changed its mind.
All this after ANNOUNCING to me that I had won. And no apology either. I’m quite disgusted with the prize and jury both, and I feel rather sorry for whoever else will win. If by some chance it’s my other translation, quite needless to say, I won’t be accepting the award 🙂
In my usually sensible mother’s sensible words, “If they were going to succumb to some pressure to change their minds, they needn’t have told you at the least.” Quite how I feel.
Through all this, I wonder which the more rubbish thing to do was – announce, congratulate and withdraw, or make me waste a weekend so they could have grounds for hogwash.
I would even understand if there were a serious charge, or any charge, against me or the author, from plagiarism to poor grammar. Their excuse is that they are suddenly worried the character’s opinions may expose them to legal action (?!)
Oh, the award was that the book would be published in the US. Apparently less than 1 per cent of translated works published in the US are from South Asia and our jury is fighting that battle for us.
And they say they don’t have the time and resources to enter into an editorial process with the author, to avoid said hypothetical legal action. Don’t have time to engage in an editorial process for an award aa?
The mental torment of being told I’d won and then told I hadn’t (which their legal counsel has not said could expose them to legal action from the third world, where people have no rights and emotions, of course) aside, I’m glad I don’t have to work with them.
So much for the credibility of this award, in its inaugural year.
I asked for my name to be withdrawn from the shortlist, in response to their stating that although they have changed their minds about the winner, I should be proud to be on their shortlist. Err…no.
நந்தினியின் முடிவை நானும் அவர் மொழிபெயர்த்த நாவலின் ஆசிரியர் என்ற முறையில் ஏற்கிறேன். நீங்கள்தான் போட்டியில் வென்றீர்கள் என்று வாழ்த்துச் செய்தி அனுப்பி விட்டு மூன்றே நாளில் சட்டச் சிக்கல் வரும், பின்வாங்குகிறோம் என்று சொன்னால் அதை விட அயோக்கியத்தனம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?
அதாவது, அந்த நிறுவனத்தின் முதல் ஆண்டுப் பரிசுப் போட்டியே இதுதான். நாவலிலிருந்து பத்துப் பதினைந்து பக்கங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் கேட்கிறார்கள். உலகம் பூராவிலிருந்தும் அப்படி அனுப்பப்பட்டு அதில் நந்தினியின் மொழிபெயர்ப்பு (என் நாவல்) குறும்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மூன்று நாள் கழித்து நந்தினிக்கு உங்கள் மொழிபெயர்ப்புதான் வெற்றி பெற்றது, வாழ்த்துக்கள் என்று செய்தி வருகிறது. இரண்டு நாள் கழித்து அந்த நாவலின் வேறு சில அத்தியாயங்களை அனுப்புங்கள் என்று தாக்கீது வர, நந்தினி அதையும் அனுப்புகிறார். ஐயோ, சட்டச் சிக்கல் வரும், நாங்கள் ஓடி ஒளிந்து கொள்கிறோம் என்று ஜகா வாங்கி கடிதம்.
அப்படியானால் அவர்கள் இந்தப் போட்டியே நடத்தக்கூடாது. ஏனென்றால், இவர்கள் தேர்ந்தெடுப்பது பத்துப் பதினைந்து பக்கங்களை வைத்து. அந்தப் பக்கங்களுக்கு அப்பால் நாவலில் ஏதாவது சட்டச் சிக்கல் வந்தால் என்ன செய்வார்கள்?
இதை இனவாதம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? ஏய்யா, நீங்கள் அமெரிக்காவில் உட்கார்ந்திருப்பதால் நாங்கள் உங்களுக்கு சூத்துக் கழுவி விட வேண்டுமா?
நந்தினி கேட்டுக் கொண்டபடி குறும்பட்டியலிலிருந்து என் நாவலை எடுத்து விடுங்கள்.
இந்தச் செய்தியை என் மீது அன்பு கொண்டவர்கள் யாவரும் உங்கள் வலைதளங்களின் மூலம் பரப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.