நகுலன், புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு. செல்லப்பா, கோபி கிருஷ்ணன் மற்றும் ஒரு சிலர் பற்றி கொரோனா காலகட்டத்தில் பேசிய இந்த உரைகள் தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷம் என்பதை இலக்கிய ஆர்வலர்கள் அறிவார்கள். பலராலும் நான்கு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்க முடியவில்லை என்று பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். உரையாற்றும் நேரத்தைக் காலை ஆறு மணிக்கு வைத்ததன் காரணம், என் அமெரிக்க வாசகர்கள். அவர்களுக்கு அது மாலை நேரமாக இருக்கும் என்பதால் இந்த வசதியைச் செய்து கொடுத்தேன். ’எனக்கு சௌகரியப்பட்ட நேரத்தில்தான் பேசுவேன், கேட்டால் கேளுங்கள், கேட்காவிட்டால் எனக்கு நஷ்டமில்லை’ என்று சொல்லக் கூடிய மனோபாவம் கொண்டவனில்லை நான். எனக்கு சிரமம் என்றாலும் பரவாயில்லை, மற்றவர்கள் சிரமப்படக் கூடாது என்றே காலை ஆறு மணிக்கு வைத்தேன். ஒவ்வொரு உரைக்கும் அதைக் கேட்ட வாசகர்கள் ரூபாய் ஐம்பதாயிரம் வரை அனுப்பினார்கள். சிலர் நூறு ரூபாய். சிலர் ஐயாயிரம் ரூபாய். இன்ன கட்டணம் என்று வைக்கவில்லை.
ஒவ்வொரு உரைக்கும் ஒரு மாதம் ராப்பகலாகப் படித்தேன்.
இது கோபி கிருஷ்ணன் மாஸ்டர் கிளாஸ்: 2