பெட்டியோ நாவலின் இருபத்தைந்தாவது பிரதியை ஒரு நண்பர் முன்பதிவு செய்திருந்தார். அதனால் நூறாவது பிரதி (ஐந்து லட்சம் ரூபாய்), இரண்டாவது பிரதி (ஒரு லட்சம் ரூபாய்) ஆகியவற்றுக்குப் பிறகு இருபத்தைந்தாவது பிரதியை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். சில நண்பர்கள் பத்தாயிரம் ரூபாய் விலையுள்ள பிரதிகளை விற்பனைக்குக் கொண்டு வாருங்கள் என்று கேட்டார்கள். அது இப்போதைக்கு இயலாது. காரணம், இரண்டாவது பிரதி விற்றால்தான் பத்தாயிரம் ரூபாய்க்கான பிரதியைக் கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், இரண்டாவது பிரதியை விற்பனையிலிருந்து தூக்க வேண்டும். அதுவும் இயலாது. ஏனென்றால், ஒவ்வொரு பிரதியையும் என்.எஃப்.டி. தளத்தில் விற்பனைக்கு வைக்க என்.எஃப்.டி.க்கு நாங்கள் வாடகைப் பணம் செலுத்த வேண்டும். இதுவரை ஐயாயிரம் ரூபாய் செலுத்தியாயிற்று.
அதனால் இப்போதைய நிலவரம், இருபத்தைந்தாவது பிரதியை ஒரு நண்பர் ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்குகிறார். வேறு யாரேனும் இரண்டாவது பிரதியை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கி விட்டால் பத்தாயிரம் ரூபாய்க்கான பிரதிகளை இறக்கி விடலாம்.
சில லூசுக்கூமுட்டைகள் நான் வெளிநாடு போய் கும்மாளம் போடுவதற்காக இதைச் செய்வதாக எழுதுகின்றன. உண்மைதான். அப்படிக் கும்மாளம் போட்டதால்தான் பெட்டியோ என்ற அற்புதமான நாவல் வந்தது. இலங்கையில் நடந்த போரின் கதைகளை என்னிடம் சொன்னவர்கள் மதுபான விடுதிகளில் வைத்துத்தான் சொன்னார்கள். சரவண பவன் ஓட்டலில் வைத்து அல்ல. சினிமா இயக்குனர்கள் வெளிநாட்டு சினிமாவிலிருந்து திருடி திருட்டுப் படம் எடுப்பதற்கு நாற்பது கோடி சம்பளம் வாங்குகிறார்கள். இசையமைப்பாளரும் வெளிநாட்டு ட்யூனைத் திருடி திருட்டுப் பாட்டுப் போட பத்து கோடி சம்பளம் வாங்குகிறார். இதெல்லாம் யார் வீட்டுப் பணம்? எல்லாம் மக்கள் தரும் பணம்தானே? நானோ சொந்தமாக எழுதி என் சொந்த நாவலை ஒரு லட்சத்துக்கு விற்றால் இவன்களுக்குக் குதமெல்லாம் எரிகிறது. வாங்குபவர்கள் வாங்குகிறார்கள். உங்களுக்கு என்னடா பிரச்சினை?
இருபத்தைந்தாவது பிரதியின் யு.ஆர்.எல்.
https://opensea.io/assets/ethereum/0x10de9040a2337a8982f01006493cb26aff4abd9b/2
வாங்குவதற்கான முறை தெரியாவிட்டால் வினித்தை அழைக்கவும்: 84384 81241
என்னைத் தொடர்பு கொள்ள: charu.nivedita.india@gmail.com