1.சிறுமியாக இருக்கும்போது இந்தப் பெண் பாடிக் கேட்டிருக்கிறேன். உலகப் புகழ் பெறுவாள் என்று யூகித்தேன். பத்தாண்டுகள் கடந்து விட்டன. இப்போது பிரபலமான பாடகி. க்ருதி விட்டல். நாளை காலை ஆறு மணிக்கு கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் தெற்கு மாடவீதியில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவிலில் பாடுகிறார் க்ருதி விட்டல். நான் அங்கே 5.55க்கு இருப்பேன். நிகழ்ச்சி முடிந்து தெற்கு மாடவீதியின் தொடக்கத்தில் உள்ள (தெப்பக்குளத்துக்கு நேர் எதிரில்) சங்கீதா உணவகத்தில் காலை உணவை முடிக்கலாம். மைலாப்பூரிலேயே நல்ல இட்லி கிடைக்கும் ஓரிரு உணவகங்களில் முதல் இடம் இந்த சங்கீதா தான். சங்கீதா என்ற பெயரிலேயே தெருவுக்கு ஒரு உணவகம் உள்ளது என்றாலும் இந்தத் தெற்கு மாடவீதி சங்கீதாதான் ஆகச் சிறந்தது. பார்ப்பதற்கு ஆடம்பரமாக இருக்காது. ஆனால் தரம் முதல் தரம். யாரேனும் வந்தால் பாட்டுக் கேட்டு விட்டு ஒன்றாகச் சாப்பிடலாம். கற்பகாம்பாள் மெஸ் வேண்டாம். அதன் தரம் கொஞ்சம் இறங்கி விட்டது.
2. பெங்களூருவில் 26இலிருந்து 29 வரை இருப்பேன். முப்பதாம் தேதி மாலைதான் கிளம்புகிறேன். 29 மாலை பெங்களூரு நண்பர்களை சந்திக்க முடியும். கோரமங்களாவில் Biergarten Brewery என்று ஒரு பப் உள்ளது. அங்கே 29 மாலை ஐந்து மணிக்கு வந்தால் என்னை சந்திக்கலாம். விலாசம்: 4th B Cross, 5th Block, Koramangala. ச்ந்திக்க விரும்புபவர்கள் எனக்கு எழுதவும். charu.nivedita.india@gmail.com
3. கேரள இலக்கிய விழா கோழிக்கோட்டில் ஜனவரி 11 இலிருந்து 14 வரை நடக்க உள்ளது. அதில் நான் 13-ஆம் தேதி பேச இருக்கிறேன். வாசகர்களுடனான உரையாடலும் இருக்கும். அதில் நீங்கள் கலந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். கோழிக்கோட்டில் 12ஆம் தேதி மாலையிலிருந்து 14 மதியம் வரை இருப்பேன்.