தேவதேவன் நூல் வெளியீட்டு விழா – டிசம்பர் 30

முகநூலில் அராத்து எழுதியது:

இலக்கிய விழாக்களுக்கு மஞ்சத்தண்ணி , காது குத்து போல தனித்தனியாக அழைப்பது உகந்ததல்ல. இந்த பொது அழைப்பையே அனைவரும் தனி அழைப்பாக ஏற்றுக்கொண்டு வந்து சேரவும். தேவதேவன் , சாரு நிவேதிதா மற்றும் அபிலாஷ் சந்திரனின் உரைகள் கவிதையைப் பற்றி புதியதொரு திறப்பை உங்களுக்குக் கொடுக்கும்.

நன்றியுரை என்ற சாக்கில் நானும் கொஞ்சம் கவிதையை வறுக்கலாம் என்றுள்ளேன்.

எந்த பல்கலைகழகத்திலும் கிடைக்காதது இது. தனி மனிதர்கள்தான் இங்கே செய்ய வேண்டியிருக்கிறது.

நம் வாசகர் வட்ட நண்பர்கள் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகின்றன.

இதை சாக்காக வைத்து சந்திக்கலாம்.அப்படியே பெங்களூரில் புது வருடக் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம்.

இதைபடிக்கும் தமிழ்நாட்டு நண்பர்கள் , திட்டமிட்டுக்கொள்ளவும். இயன்றவர்கள் வாருங்கள்.

பெங்களூர் தமிழ் சங்கத்தில் 300 பேர் வரை அமரலாம். இடம் கொடுத்த செயலாளர் , 30 பேராச்சும் வருவாங்களா ? 10 , 20 பேர் வந்தா நல்லாருக்காது …அசிங்கமாயிடும் என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

யாருக்கு அசிங்கமாயிடும் 🙂

பெங்களூரில் இருக்கும் தமிழர்கள் பெரும்பாலும் இதைப்போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லையாம்.

ஒரு 50 பேர் வந்தாங்கன்னா நல்லாருக்கும் சார் என கனவு போல சொல்லிக்கொண்டிருந்தார்.

அதனால் பெங்களூரில் இருக்கும் நண்பர்களும் சோம்பல் முறித்து விட்டு வாருங்கள்.

ஹோசூர் , வேலூர் , சேலம் , கிருஷ்ணகிரி , தர்மபுரி நண்பர்களுக்கு வந்து போவது சுலபம்.

சென்னை வந்தேபாரத் 4 மணி நேர பயணம் மட்டுமே.

மாலை 6 மணிக்கு விழா.

மாலை 4 மணியில் இருந்து சந்திக்கலாம்.

– அராத்து

***

நானும் அழைக்கிறேன்.

– சாரு