உல்லாசம், உல்லாசம்… நாவலின் முன்பதிவுத் திட்டத்திற்காக சில நண்பர்கள் இருபதாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்கள். என் தொலைபேசி எண் அவர்களுக்குத் தெரியும் என்பதால் ஜிபே மூலம் அனுப்புவது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால் ரேஸர்பேயில் பத்தாயிரம் ரூபாய் வரைதான் அளவு வைத்திருக்கிறார்கள். அது சம்பந்தமாக என் நண்பர்கள் ரேஸர்பேயிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அது முடிந்ததும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இப்போதைக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அனுப்பும் நண்பர்கள் ரேஸர்பேயைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு மேல் என்றால், எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
இன்னொரு விஷயம். உங்கள் கையில் உல்லாசம், உல்லாசம்… நாவல் இருக்கிறது. அதை நீங்கள் பத்தாயிரமோ, இருபத்தைந்தாயிரமோ, ஐம்பதாயிரமோ, ஒரு லட்சமோ கொடுத்து வாங்கியிருக்கிறீர்கள். இது எப்படி மற்றவர்களுக்குத் தெரியும்? அந்த நூல் அவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டிருக்கிறது என்பதுதானே அதன் சந்தை மதிப்பு? அதற்காகத்தான் புத்தகத்தின் வெளி அட்டையில் பெட்டிகள் இருக்கும். 1000, 2000, 5000, 10000, 25000, 50000, 100000 என்று ஏழு கட்டங்கள். அதில் ஒன்றில் டிக் அடித்திருக்கும். அதுதான் அந்தப் புத்தகத்தின் பண மதிப்பு. அல்லது, ஐம்பதாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்குகிறாயா மவனே என்று வீட்டில் உள்ள பெண் இனம் அல்லது ஆண் இனம் உங்கள் மீது வன்முறை செலுத்தக் கூடும் சாத்தியம் இருக்கிறது என்றால், எந்த டிக்கும் இல்லாமலேயே புத்தகத்தை என் கையெழுத்துடன் தருவேன். அதனால் வீட்டு வன்முறை குறித்த எந்தத் தயக்கமும் நிச்சயம் வேண்டாம்.
ரேஸர் பே விவரம்:
https://rzp.io/l/ullasamullasam1000
https://rzp.io/l/UllasamUllasam2000
https://rzp.io/l/UllasamUllasam5000
https://rzp.io/l/UllasamUllasam10000
மற்ற தொகைகளுக்கு எனக்கு எழுதவும்.
charu.nivedita.india@gmail.com
இன்னொரு விவரம்: இருபதாயிரம் என்ற கட்டம் உல்லாசம், உல்லாசம்… நாவல் விலைப்பட்டியலில் இல்லை. இருபத்தைந்தாயிரம்தான். அதனால் இப்போது இல்லையென்றாலும் கொஞ்ச நாள் கழித்து மீதி ஐயாயிரத்தை அனுப்பி வையுங்கள்.
ஒரு முக்கியமான விஷயம். ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகமும் இலக்கிய அறிவு இல்லாமல் ஃபிலிஸ்டைன் சமூகமாக வாழ்ந்து வருவதால்தான் உங்களுக்கு இந்த சிரமம். ஒட்டு மொத்த சமூகத்தின் ஃபிலிஸ்டைன் குணத்தை நீங்கள் உங்களுடைய செயலால் பிராயச்சித்தம் செய்கிறீர்கள். என் சுமையைக் குறைக்கிறீர்கள். இல்லாவிட்டால், எனக்கும் புதுமைப்பித்தன் கதைதான். க்ஷயரோகம்தான். எனவே, எனக்கு ஆதரவு அளித்து என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் என் வாசகர்கள் அனைவரும் ஒரு மிகப் பெரிய சமூகக் கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். என் பயணங்கள் அனைத்தும் மகத்தான நாவல்களாக மாறிக்கொண்டிருப்பதை அறிவீர்கள். அதற்குக் காரணமாக இருப்பது நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.