இன்று புத்தக விழாவின் மூத்திர சந்தில் அமைந்துள்ள ஸீரோ டிகிரி அரங்கில் அமர்ந்திருந்தபோது என் சக எழுத்தாளர் ஒருவர் ஒரு நண்பரிடம் தனக்கு முப்பது ஆண்டுகளாக சர்க்கரை வியாதி இருப்பதாகவும், அதனோடுதான் தான் வாழ்ந்து வருவதாகவும் சொன்னபோது மிகவும் வருத்தம் அடைந்தேன். நான் இங்கே என்னுடைய இந்த இணையதளத்தில் சர்க்கரை வியாதி உள்ள எல்லோரையும் கூவிக் கூவி அழைத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பர் சித்த மருத்துவர் பாஸ்கரன் ஒவ்வொரு சர்க்கரை வியாதிக்காரரையும் சவால்விட்டு குணப்படுத்திக்கொண்டிருக்கிறார். சர்க்கரை வியாதி முற்றி கண் பார்வை லேசாக மங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளைக்கூட முழுமையாக குணப்படுத்தியிருக்கிறார். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, எது சாப்பிட்டாலும் பெட்ரோல் நாற்றம் வரும் பிரச்சினையில் இருந்தார். அவருக்கே அது பாதி குணமாகிவிட்டது. பாதி குணமானதும் அவர் பாஸ்கரனின் மருந்தை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். நான்தான் அவரைக் கண்டித்து தொடர்ந்து மருந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினேன். நான் ஒன்றும் பாஸ்கரனின் பிரச்சாரகன் அல்ல.
போகரிடமிருந்தும் இன்னும் அவரது மூத்தோரிடமிருந்தும் தொடங்கி, கோரக்கர் மற்றும் அவரது தொடர்ச்சியாக எண்ணற்ற சித்த மருத்துவ மேதைகளின் வழியாக, புற்று மகரிஷியிடம் மருத்துவம் பயின்ற பாஸ்கரனின் மூதாதையரிடமிருந்து இவருக்கு வந்து கிடைத்த நமது சொத்தான சித்த மருத்துவத்தையே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறேன்.
அந்த எழுத்தாளர் நண்பர் என் இணையதளத்தைப் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். நானே குறுக்கிட்டு சொல்லியிருக்கலாம். கேட்க மாட்டார்கள். நம்ப மாட்டார்கள். அதனால் சொல்லவில்லை. என்னை வாசிக்கும் உங்களிடம் சொல்கிறேன். பாஸ்கரனின் மருந்தை முயற்சி செய்து பாருங்கள். வேலை செய்யாவிட்டால் விட்டுவிடுங்கள் என்றுதான் சொல்கிறேன். இதுவரை ஒருவர்கூட வேலை செய்யவில்லை என்று சொன்னதில்லை.
சித்த மருத்துவர் பாஸ்கரன் கீழ்க்கண்ட ஊர்களுக்கு வருகிறார்”
புற்று மகரிஷி சித்த மருத்துவத்தின் தலைமை மருத்துவர் பாஸ்கரன் வரும் 19.1.24 – வெள்ளிக்கிழமை கோயம்புத்தூரிலும், 20.1.24 – சனிக்கிழமை காலை திருச்சியிலும், அன்று மதியம் மதுரையிலும், 26.1.24 – வெள்ளிக்கிழமை புதுச்சேரியிலும் சந்தித்து மருத்துவ ஆலோசனையும் உரிய சிகிச்சையும் பெறலாம். சித்த மருத்துவம் நோய்நொடியில்லா நல் வாழ்க்கைக்கு சிறப்பான வழிகாட்டும். இது தவிர பாஸ்கரனை வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சந்திக்கலாம்.
முன்பதிவுக்கு அழைக்கவும்: 78260 57789. அல்லது வாட்ஸப் பில் தகவல் அனுப்பவும் 078711 77789 அல்லது முன்பதிவு விண்ணப்பத்தை நீங்களே பூர்த்தி செய்து சந்திப்பை உறுதிசெய்து கொள்ளவும்:
https://bit.ly/PutrumaharishiSiddha