பிரம்மயுகம் படத்திற்கு அராத்துவின் விமர்சனம் கீழே:
சாரு எதோ ஜாலி மூடில் இருந்திருப்பார் போல. லேசான நக்கலுடன் எழுதி முடித்து விட்டார்.
இந்தப் படத்தையெல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும்.
ஒரு கஞ்சா குடிக்கிக்கு , கஞ்சா இல்யூஷனில் என்ன தோன்றியதோ, அதை கஞ்சா குடித்துக்கொண்டே எடுத்து வைத்து நம்மை துவைத்து எடுக்கிறார்கள்.
படத்தில் ஒரு மண்ணும் இல்லை , ஒரு மயிரும் இல்லை.
சாரு ஒரு படத்தை மலக்கிடங்கு என எழுதியிருப்பார். இந்தப்படம் ..நம்மை உட்கார வைத்து மல அபிஷேகம் செய்வது போல இருக்கிறது.
ஏண்டா? ஒரு நியாய தர்மம் வேண்டாமா ? இதெல்லாம் ஒரு படமா ? இட் ஈஸ் எ 100 % சீட்டிங் மூவி.
படம் முழுக்க மூன்று எருமை மாடுகள் சட்டை இல்லாமல் ஒரு பாழடைந்த வீட்டை சுற்றி சுற்றி வருகின்றன. அவ்வப்போது ம்ம்மா …ம்மாஆஅ என கத்திக்கொள்கின்றன. இவ்ளோதான் படம்.
மாவட்டக் கலைக்கழக போட்டி என ஒன்று நடக்கும். அதில் தனி நடிப்பு என ஒரு பிரிவு. அதில் நான்கூட மாவட்ட அளவில் ஆறாம் வகுப்பு படிக்கையில் பரிசு வாங்கியிருக்கிறேன். அந்த லெவலில் மம்முட்டியை வீணடித்து இருக்கிறார்கள். ஒரு பல்செட் கட்டிக்கொண்டு , அதில் வெத்திலைப் பாக்கு கறையுடன் வித விதமாகச் சிரிக்கிறார். ஆண்டவா !
அந்த யட்சி என்ன கண்றாவி எனத் தெரியவில்லை. ஃபகத் ஃபாசிலுக்கு பெண் வேடம் போட்டது போல சூத்தை ஆட்டி ஆட்டி நடந்து வருகிறது. அது கதைக்கு என்ன கண்றாவிக்கு எனத் தெரியவில்லை. கதை இருந்தால்தானே ! ஏண்டா யக்ஷின்னா ஒரு மரியாதை வேணாமா ? இப்டியா ஒரு பே அண்ட் யூஸ் டாய்லெட்டில் கஸ்டமரை பிடிப்பது போல வடிவமைப்பது ?
மம்முட்டி , சமயல் காரான் இல்லாமல் இன்னொரு கேரக்டர் இருக்கிறான் அல்லவா ? அவன் படம் முழுக்க யாருமில்லா பாழடைந்த வீட்டினுள் தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறான்.
அது கூட பரவாயில்லை. எந்த எழவெடுத்தவன் டப்பிங் அஸிஸ்டெண்ட் எனத் தெரியவில்லை. அல்லது இயக்குநர் டப்பிங்கில் எல்லாம் தலை நுழைக்கிறாரா என்றும் புரியவில்லை.
படம் முழுக்க அந்த ஆசாமி பயந்து பயந்து நடந்து செல்கையில் , ம்ங்ஹ், ம்ங் , ஹூங் , ஹுங்ஸ் என நாராசமாக சத்தம். வழக்கமான திரில்லர் படங்களில் , பெண்கள் கூட மார்பகங்கள் ஏறி ஏறி இறங்கினாலும் வாயில் கையை வைத்து பொத்திக்கொள்வார்கள். இந்த நாசமாய்ப்போனவன் பலான படத்தில் சவுண்ட் கொடுப்பது போல சவுண்ட் கொடுத்து படம் முழுக்க ஒரே டார்ச்சர்.
அப்புறம் படம் முழுக்க 20 முறையாவது வந்திருக்கும். தனியாக இருக்கையில் மர்மப் புந்தையாக கேமராவை பார்த்து அதிர்ச்சி ஆகுதல். சரி அது என்ன எழவு எனக் காட்டும்போது நாமும் கொஞ்சம் அதிர்ச்சி ஆகலாம் எனப் பார்த்தால் ஒரு மயிரும் இருக்காது. பெரும்பாலும் மம்முட்டி பழுப்புப் பற்களைக் காட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருப்பார். அடப்பாவிகளா…
என்ன கண்றாவியாவது எடுக்கலாம். ஒன்று கலைப்படமாக மிளிர வேண்டும் அல்லது கமர்ஷியலாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
இது என்னை தாலாட்டா வருவாளா என ஆரம்பம் முதலே கொட்டாவி வர வைக்கிறது. தொடையையும் குஞ்சியையும் கிள்ளிக் கிள்ளிக்கொண்டுதான் தூக்கத்தைத் தடுத்து மொத்தப் படத்தையும் பார்த்தாக வேண்டி இருக்கிறது. பெண்கள் எதைக்கிள்ளிக்கொண்டு பார்த்தார்கள் என ஒரு ஃபெமினைன் பார்வையில் முன்வைக்கலாம்.
கடைசியில் ஏதோ பவர் என்கிறார்கள். ஒரு விளக்கை அணைத்து விட்டு மோதிரத்தை போட்டுக்கொண்டால் பவராம். கருமம் , அந்த அநாதரவான காட்டில் அந்த பவரை வைத்துக்கொண்டு என்ன மயிரைப் புடுங்க முடியும் என்பது அந்த குருவாயூரப்பனுக்கே வெளிச்சம்.
அந்த பவரும் என்னவெனில் வாயைத் திறந்து ஓவெனக் கத்தினால் தொண்டையில் ஒரு வெளிச்சம் வரும். அதை வைத்து எதிரே இருக்கும் அல்லக்கையை அந்த வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் செய்ய முடியும்.
வன்முறையில் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லாத எனக்கே , இந்தப் படம் ஓடும் திரையைக் கொளுத்தலாம் எனத் தோன்றியது.
– அராத்து