நான் தமிழில் இளைஞர்களின் கதைகளைப் படிப்பதில்லை என்று எழுதியிருக்கிறேன். முதல் பத்தியையே தாண்ட முடியாத அளவுக்கு இலக்கணப் பிழைகள் மலிந்திருப்பதுதான் முக்கியக் காரணம். ருசியான உணவில் கல் கிடந்தால் என்னதான் ருசியாக இருந்தாலும் எப்படி உண்ண முடியும்?
ஆனால் டானியல் ஜெயந்தனின் இந்தக் கதையில் அப்படிப்பட்ட கற்கள் எதுவுமே இல்லை. ஆற்றொழுக்கான நடை. சே, நானே இப்படி எழுதிவிட்டேனே? கையோடு நம்மை அழைத்துச் செல்லும் சுவாரசியமான நடை. சுவாரசியமான கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இனிமேல் தைரியமாக டானியல் ஜெயந்தனைத் தொடர்ந்து படிப்பேன். அவருடைய ஒரு சிறுகதையை ஃப்ரான்ஸில் வசிக்கும் சில தமிழ் ஃபிலிஸ்டைன் கும்பல் ஒன்று சென்ற ஆண்டு பிரச்சினை பண்ணி அவருக்கும் பெரிய சிக்கலைக் கொடுத்தது. அந்தக் கதையையும் படிக்க வேண்டும்.
சிவப்பு நிற உதட்டுச்சாயம் – டானியல் ஜெயந்தன் (danieljeyanthan.com)