அமைதியின் நிழல்

ஏழரை ஆண்டுகள்
வீட்டின் சுவர்கள்
சிறையென மூடியபோது
அமைதியே
அவளின் நிழலாயிருந்தது
காற்றற்ற நீரின் வதனமாக
எதையும் பிரதிபலிக்காமல்
எல்லாவற்றையும் தாங்கி
அமைதியே அவளது
அடையாளமாயிற்று

சிறை மீண்டு வந்த பிறகு
அவளுக்கு
அமைதியை உடைத்து வரக்
கற்பித்தேன்
ஆனால்
காற்றில் மிதக்கும் மலரின் நிழலென
அமைதி என்னில்
குடி பெயர்ந்தது