இன்றைய காலகட்டத்தின் மிகச் சிறந்த காதல் கவிதை

எதுவென்று கேட்டால் அராத்து எழுதிய இந்தக் கவிதையைத்தான் சொல்வேன். கீழே தருகிறேன்.

காதல் டிக்‌ஷ்னரி – புத்தம் புதிய காப்பி – 3

பட்டா

ஏய் உன்ன யாரும் தொடாத

கிஸ் பண்ணாத எடத்த எனக்கு மட்டும்

குடுக்கறியா?

எனக்கு மட்டும் தான்.

ம்ம்நெத்தி?

ம்ஹூம்

பின்னங்கழுத்து?

சாரிடா

பம்ஸ்?

ப்ச்..அதெல்லாம் எப்பவோ.. வேற எதாச்சும் கேளுடா

இடது கை சுண்டு விரல்?

ம்ம்…ம்ம்…சரியா ஞாபகம் இல்ல..ஆனா விரல் சப்பிருக்காங்க..வேணாம்

பட் ஹோல்?

அத எவனாச்சும் விடுவானா?

அடிப்பாதம்?

ப்ச்

பாதத்தையும் விடாம நக்கிட்டானுங்களா? ம்ம்..ஹார்ட்டு?

முலையா?

இல்லடீ ஹார்ட்டு?

ஹார்ட்டா? அத எப்டிடா தொடுவ?

***

இதுதான் இன்றைய காதல். இன்றைய காதலை தமிழில் எழுதும் ஒரே ஆள் அராத்துதான். மற்றவர்கள் ஏன் எழுதுவதில்லை என்றால், தெரியாது. தெரிந்தாலும் எழுத மாட்டார்கள். எழுதத் துணிச்சல் வேண்டும். சமூகம் குறித்து அல்ல. அவர்களின் மனதே அதை ஏற்காது.

எனக்குத் தெரியும். ஆனால் எழுத மாட்டேன். ஏனென்றால், கவிதையில் நான் ஒரு கிறிஸ்துவாக ஆக விரும்புகிறேன். மனிதர்கள் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு கன்னத்தில் அடித்தால் அடுத்த கன்னத்தைக் காண்பி என்று சொல்வதெல்லாம் ஒரு மனிதனால் சாத்தியமாக முடியாதது. அவனுடைய கற்பனையில் கூட காண முடியாதது. கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் மட்டுமே அப்படிச் சொல்ல முடியும். கவிதையில் அப்படி ஒரு இடத்தை நான் அடைய விரும்புகிறேன்.

இப்போதும் அப்படிப்பட்ட காதலர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு நானும் ஒரு சாட்சி. ஔரங்ஸேப் தொப்பி தைத்து அதில் வரும் பைசாவில் வாழ்ந்தது போல் இன்னமும் சில அரசு அதிகாரிகள் உண்டு. அதேபோல் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்று இப்போதும் வாழ்கிறவர்கள் உண்டு. அதற்கும் நானே சாட்சி. நான் வாழ்வதையே எழுதுகிறேன். எழுதுவதையே வாழ்கிறேன்.