சுமைகளை இறக்கி வைப்போம்!

அன்பே
உன்னிடமொரு பிரார்த்தனை
உனக்கு நான் ஏதேனும்
நன்மை செய்வதாய்த் தோன்றினால்
நன்றியறிதல் கொள்ளாதே
அக்கணமே அதை மறந்து விடு
நாய்களுக்குமுண்டு நன்றியறிதல்
மனித இனம் விலங்கினும் மேன்மையுடைத்து!

என்ன செய்யலாம்?
அடுத்தவரைத் துன்புறுத்தல்
மானுட அடையாளமாய்
மாறி விட்ட காலத்தில்
துன்பம் கொடுக்காதிருக்கலாம்
அல்லது
அதைக் குறைக்கலாம்
அல்லது
அன்பு பூண்டொழுகலாம்
ஆனால்
ஒருபோதும்
நான் செய்யும் இனிய செயல்
உன் தோள்மீது
பாரமாய் ஏறி விடக் கூடாது
ஏறினால்,
அது
நிபந்தனையற்ற என்
அன்பின்
பிரியத்தின்
காதலின்
வீழ்ச்சியாகும்
எனக் காண்பாய்!