ஈகோவினால் ஆன பயன்


மோகினிக்குட்டிக்காக
எதையும் செய்வேன்
அவளுக்கும் தெரியும்

ஒருநாள் போதையில்
அவள் தட்டிலிருந்து எடுத்து
சாப்பிட்டு விட்டேன்
எனக்குத் தெரியாது
மறுநாள் சொன்னாள்
எனக்குப் பிடிக்காது

போதையில் நிகழ்ந்த சிறு தவறு
எனச் சொன்னாலும்
அவள் மனம் மாறவில்லை

நானோ ரோஷக்காரன்
’ஆ, நீதானே உனக்கு வெட்கம் மானம்
சூடு சொரணை ரோஷம் எதுவுமில்லை’யென்று
ஒரு கவிதையில் எழுதியிருந்தாய்’ எனக்
கேட்காதீர்
அது வேறு
இது வேறு
ரெண்டையும் குழப்பக் கூடாது

ஆங், நான் ரோஷக்காரன்
அவள் தட்டை இனித் தொடேன்
ஒருநாள் உணவகத்தில்
சிக்கன் கபாப் சொன்னாள்
ஆறு துண்டு வந்தது
மூணு நீ எடு எனப் பகிர்ந்தாள்
கபாப் எனக்கு உயிர்
பசியும் கொடூரம்
ஆனால் இப்போது பசியில்லை என்றேன்
அவள் நாலு தின்று ரெண்டை விட்டாள்
நான் கொலைப்பசியில் பசியில்லையென்று
சொல்லி விட்டு ஜூஸ் குடித்தேன்
வாந்தி வந்தது

கிளம்பும் நேரத்தில்
இப்போது பசிக்கிறது என்று
சிக்கன் கபாப் கேட்டு
மூணு பீஸ் சாப்பிட்டேன்

பைத்தியம் என்கிறீர்கள்
எனக்கு சைக்காலஜி தெரியும்
நான் பைத்தியம் இல்லை
மீண்டும் சொல்கிறேன்
எனக்கு வெட்கம் மானம்
சூடு சொரணை ரோஷம்
எதுவும் கிடையாது
ஆனால்
மோகினிக்குட்டி ஏதும் சொன்னால்
எல்லாம் வந்து
உட்கார்ந்து கொள்ளும்

என்னுடைய பப்பு நாயும்
இப்படித்தான்
அதற்கும் வெட்கம் மானம்
சூடு சொரணை ரோஷம்
எதுவும் கிடையாது
எருமை மேல் பெய்ந்த மழை
ஆனால்
நான் ஒரு வார்த்தை
திட்டி விட்டால்
ரெண்டு நாள் சாப்பிடாது
நான் அதன் நாலு காலிலும்
விழுந்து கெஞ்சினால்தான்
சாப்பிடும்

மோகினிக்குட்டியிடம் மட்டும்
நான் ரோஷக்காரன்
ஏழு பிறவியெடுத்தாலும்
இனி அவள் தட்டைத்
தொட மாட்டேன்
இத்தனைக்கும் அகவை எழுபது வரை
முத்தம் தெரியாத எனக்கு
முத்த சமுத்திரத்தைக் காண்பித்தவள்
ஆனால் தட்டு விஷயம் வேறு
அவள் எதையும் பகுத்துப் பிரித்தறியும்
கலை அறிந்தவள்
அதனால் தனக்கு ஏன் தட்டு விஷயம்
பிடிக்கவில்லையென்பதை
கிட்டத்தட்ட
கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ அளவுக்கு
விளக்கினாள்
எனக்கும் அது சரியாகவே தோன்றியது
அவள் சொல்லும் எல்லாமே
சரியாகவே தோன்றும்
அது வேறு விஷயம்

இப்படி அவள் ஒரு பட்டியலே வைத்திருந்தாள்
காலையில் என்ன சாப்பிட்டாய்?
பிடிக்காது
நேற்று எங்கே சென்றிருந்தாய்?
பிடிக்காது
நன்றாக உறங்கினாயா?
பிடிக்காது
நேற்று ஒரு கவிதை எழுதினாயே, அனுப்புகிறாயா?
அந்தரங்கத்தில் அத்துமீறினால் பிடிக்காது
ஏன் ப்ளூ டிக்கை…
சே சே அது பற்றி நூறு பக்கம் எழுதி விட்டேன்,
இனி வேண்டாம்

அவளை எக்ஸெண்ட்ரிக் என நினைக்க வேண்டாம்
ஒவ்வொரு பிடிக்காதுவுக்கும்
ஒவ்வொரு மேனிஃபெஸ்டோ வைத்திருக்கிறாள்
கேட்டால் நீங்களே அசந்து போவீர்கள்

ஓ, நான் ஆரம்பித்ததே பச்சைக்கண் பற்றி
சொல்லத்தான்
அதாவது, மீட்டூவில் மாட்டாமல் வாழும் வழி

கவனியுங்கள்
நிக்கர் அணிந்திருந்தாள்
வீட்டில் இருவர் மட்டுமே இருந்தோம்
தரையில்
மெத்தையில் மல்லாந்து படுத்திருந்தாள்
இறுக்கமான டீஷர்ட்டில் கொங்கைகள்
தெறித்து விழுந்தன
தொடை வலிக்கிறது என்றாள்
மஸாஜ் பண்ணினேன்
முக்கால் மணி நேரம்
“நீங்கள் வாரத்தில் எத்தனை முறை கரமைதுனம் செய்வீர்கள்?” இதுபோல் தத்துவக் கேள்விகள் பல கேட்டாள்
நானும் ஃபிங்கரிங் பற்றியும்
டில்டோ பற்றியும்
கேட்க நினைத்து விட்டுவிட்டேன்
மஸாஜ் செய்து அலுப்புற்று
கொஞ்ச நேரத்தில்
கையை மேலே கொண்டு போனேன்
ச்சீ எனச் சிணுங்கியபடி கையைத் தட்டி விட்டாள்
அது ஒரு அழைப்பு போலவே இருந்தது

இப்போது பதில் சொல்லுங்கள்
நீங்கள் என்ன செய்வீர்கள்?

இங்கேதான் ரோஷம் உதவியது
அவளே தட்டி விட்டு விட்டாள்
அப்புறம் என்ன மயிருக்கு நாம் மீண்டும்
முயற்சிக்க வேண்டும்?
வெறுமனே மஸாஜ்
அதோடு கிளம்பி விட்டேன்
கையை மட்டும்
மீண்டும் மேலே
கொண்டுபோயிருந்தால்
மீட்டூவில் மாட்டி சந்தி சிரித்திருக்கும்
ரோஷம் காப்பாற்றியது!