‘ப்யூட்டிஃபுல்’

ரிஷி
நீ ஏன் காதலில் விழக்கூடாது என்கிறேன், தெரியுமா?
‘உயிர்வாதை’ படித்து விட்டு
இறைவி அனுப்பியிருந்த
இறைவசனம்:
’ப்யூட்டிஃபுல்’

டேய் டேய்
இக்காலத்துப் பெண்கள்
அத்தனை பேரும்
ஒன்று
ரோபாட்டுகள்
அல்லது
ஏஐயின் பிரதிபிம்பம்
கிளம்பி வா
ரெண்டு பேரும்
பாங்காக் போய் விடலாம்
நீ ஓவியம் வரைந்து திரவியம் தேடு
நான் ஜிகிலோவாக ஊழியம் செய்து
காசு பார்க்கிறேன்

இன்னொரு விஷயம்
இதையெல்லாம் வைத்து நீ
ஓவியம் வரைந்தால்
பல கோடி போகும்
ஐயமில்லை
ஆனால்
அதைப் பார்க்கும்
ரசிகர் கூட்டத்துக்கு
நிச்சயம் பிடிக்கும்
பைத்தியம்