குற்றமும் தண்டனையும்

இருபது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் என் நைனா எனக்கு ஃபோன் செய்து இந்த வாரம் உன் வீட்டுக்கு நானும் அம்மாவும் வருகிறோம் என்றார்கள். பொறுங்கள், அவந்திகாவை ஒரு வார்த்தை கேட்டு விட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு அவளைக் கேட்டேன். இந்த வாரம் வேண்டாம், அடுத்த வாரம் வரச் சொல் என்றாள். நான் கேட்டேன், இப்போது இருவரின் வயதும் எண்பத்தைந்தைத் தாண்டி விட்டது, அடுத்த வாரத்துக்குள் அவர்கள் இறந்து போனால் என்னை ஒரு மகாராஜாவைப் போல் வளர்த்த என் பெற்றோரின் கடைசி ஆசையை நிறைவேற்றாத பாவத்துக்கு ஆளாவேன் என்றேன். அப்படியெல்லாம் நடக்காது, வீட்டில் அரிசி இல்லை, அடுத்த வாரத்துக்குள் சம்பளம் வந்து விடும், அடுத்த வாரமே வரச் சொல் என்றாள் அவந்திகா.

இதை அப்படியே ப்ளாகில் எழுதினேன். தமிழ் ஸ்டுடியோஸ் அருண் அப்போது ஒரு இயற்கை தான்ய விற்பனை நிலையம் வைத்திருந்தார். அவர் பல ஆண்டுகள் எனக்கு மாதாமாதம் அரிசி மூட்டை அனுப்பிக்கொண்டிருந்தார்.

அம்மாவும் நைனாவும் அடுத்த வாரம் வந்தார்கள். கறிக் குழம்பு சமைத்துப் போட்டாள் அவந்திகா.

அப்படி ஒரு நிலைமையில் இப்போது இருக்கிறேன். இந்த நிலை எனக்குத் தண்டனையாகக் கிடைத்திருக்கிறது. நான் செய்த குற்றம் தேர்தலுக்கு இரண்டு தினங்கள் முன்பு விஜய்தான் அடுத்த முதல்வர் ஆவார், தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட இரண்டு கட்சிகளையும் விலக்கி விட்டு நீங்கள் அனைவரும் விஜய்க்கு வாக்கு அளியுங்கள் என்று சொல்லி நான் வெளியிட்ட காணொலிதான்.

கடந்த இருபது ஆண்டுகளாக என் வீட்டு வாடகைக்கான பணத்தை அனுப்பிக்கொண்டிருந்த நண்பர் “இனி அனுப்ப இயலாது, மன்னிக்கவும்” என்று கை விரித்து விட்டார். இதுதான் தண்டனை.

எனவே, இதை வாசிக்கும் நண்பர்கள் தொடர்ந்து சந்தா அல்லது நன்கொடை அனுப்பி வையுங்கள். நூற்றி ஐம்பது நூல்கள் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு புத்தகமாக ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இப்படி என்னுடைய நூறு புதிய புத்தகங்கள் வர உள்ளன.

இதைக் கூட எழுதியிருக்க மாட்டேன். ஊருக்குப் போயிருக்கும் அவந்திகா என்னிடம் “பணத்துக்குக் கவலைப்படாதே, நான் ஊருக்குத் திரும்பியதும் ஏதாவது ஒரு வேலைக்குப் போய் இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்” என்றாள்.

அவள் வயது அறுபத்தைந்து.

ஒரு நாவல் எழுதி வெளியிட்டேன். எண்பது பிரதி விற்கிறது. அதனால்தான் ஒரு பேரரசனான நான் ஒரு பிச்சைக்காரனாக உங்கள் முன் கையேந்துகிறேன்.

ஐம்பது லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நார்வேயில் Karl Ove Knausgård என்ற ஆட்டோஃபிக்‌ஷன் எழுத்தாளரின் நாவல் ஐந்து லட்சம் விற்கிறது. அப்படியானால் ஒன்பது கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டில் என் நாவல் எத்தனை லட்சம் விற்க வேண்டும்? அப்படி விற்றால் இப்படி நான் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது. இல்லை, இல்லை, அந்த எண்ணிக்கையில் ஆயிரத்தில் ஒரு மடங்கு விற்றாலே இப்படிக் கையேந்த வேண்டாம்.

சந்தா/நன்கொடை அனுப்ப வேண்டிய விவரங்கள்:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai