உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே…

சென்ற மாதம் ஒரு சர்வதேச இலக்கியக் கருத்தரங்குக்காக அழைக்கப்பட்டு சென்றிருந்தேன். நிதி உதவி எதுவும் இல்லாமல் நடத்தப்படும் கருத்தரங்கு என்பதால் நம் செலவில்தான் போக வேண்டும், தங்க வேண்டும். மிகச் சிறிய அறை. வொர்லி என்ற பகுதியில் காந்தி நகர். முதல் நாளே கட்டிலில் இடித்துக்கொண்டேன். இடது முழங்காலில் வலது பக்கம். தேள் கொட்டியது போல் வலித்துக்கொண்டே இருந்தது. கருத்தரங்கம் முடிந்து சென்னை திரும்பி விட்டேன். கட்டிலில் இடித்ததையும் முழுமையாக மறந்து போனேன். டாக்டர் பாஸ்கரனின் சொன்னேன். தைலம் அனுப்பினார். பத்து நாள் போட்டேன். வலி சற்றும் குறையவில்லை. ஆச்சரியமாகப் போயிற்று. டாக்டர் பாஸ்கரன் சித்த மருத்துவர் மட்டும் அல்லவே, மந்திரவாதி ஆயிற்றே? அப்புறம்தான் எனக்கு ஞாபகம் வந்தது, அவரிடம் நான் கட்டிலில் இடித்துக்கொண்ட கதையையே சொல்லவில்லை. அவர் ஆர்த்ரைட்டிஸுக்கான மருந்தை அனுப்பியிருக்கிறார். எப்படி வேலை செய்யும்? மீண்டும் டாக்டர் பாஸ்கரனை அழைத்து விவரம் சொன்னேன்.

டாக்டரிடம் முழுசாகச் சொல்ல வேண்டும் இல்லையா? சொல்லத் தவறி விட்டேன். மீண்டும் தைலம் அனுப்பினார். இதன் பெயர் வர்ம அடி என்றும் சொன்னார். வேலூரில் பயில்வான்கள் அதிகம். அதனால் குத்துச்சண்டையின் போது இப்படி வர்ம அடி படுவது சகஜம். நான் கொடுக்கும் தைலத்தைப் போட்டால் ஒரே வாரத்தில் வலி பறந்து விடும் என்றார். எனக்கு ஐந்தே நாளில் வலி காணாமல் போனது. அது வரை இருபத்து நான்கு மணி நேரமும் தேள் கொட்டியது போலவே வலித்துக்கொண்டிருந்தது. உறங்கக் கூட முடியவில்லை. டாக்டர் பாஸ்கரனின் தைலம் தடவியதும் ஐந்து நாளில் முழுமையான நிவாரணம்.

எனக்குத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் ஷுகர் ஷுகர் என்கிறார்கள். டாக்டர் பாஸ்கரனின் மருந்தை உட்கொண்டால் இரண்டே மாதத்தில் சர்க்கரை சரியான அளவுக்கு வந்து விடுகிறது.

ஒரு நண்பர் புகைப்பழக்கம் உள்ளவர். நுரையீரல் பாதிப்பு. பாஸ்கரனின் மருந்தை எடுத்துக்கொண்டார். இப்போது நண்பரின் நுரையீரல் இருபத்தைந்து வந்து இளைஞனின் நுரையீரலாக மாறி விட்டது. நான் சொல்வது பலருக்கும் புருடா மாதிரிதான் தெரியும். நேரடியாக சோதித்துப் பாருங்கள். உண்மையை உணர்வீர்கள். பாஸ்கரனிடம் ஒரு நல்ல பழக்கம். முடியாததை முடியாது என்று சொல்லி விடுவார். ஆனால் அப்படி நடப்பது மிகவும் அபூர்வம்தான். சமீபத்தில் ஒரு நண்பரை அனுப்பினேன். நண்பருக்கு ஒரு வினோதமான பிரச்சினை. யாராவது நறுக் முறுக் என்று சாப்பிட்டால் இவருக்குக் கை காலெல்லாம் பதற்றத்தில் நடுங்குகிறது. அந்த சத்தம் இவரது உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் அந்த நண்பரை சந்தித்தால் என்னால் முறுக்கோ சிப்ஸோ சாப்பிட முடியவில்லை. எனக்கோ முறுக்கு என்றால் உயிர். இதற்காக அந்த நண்பருக்கு எதிரில் யாரும் முறுக்கோ மற்ற நறுக் முறுக் சமாச்சாரமோ சாப்பிடவே முடியவில்லை. பாஸ்கரனைப் பாருங்கள் என்றேன். ஒரு மாதம் மருந்து உட்கொண்டார். இப்போது அவர் எதிரே ஒரு பாக்கெட் முறுக்கை நொறுக்கினாலும் எனக்கும் தாருங்கள் என்கிறார்.

இப்படி முறுக்கு சமாச்சாரத்திலிருந்து மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பேச்சு குழறும் நிலையில் உள்ள நோய்மை வரை பாஸ்கரன் சொஸ்தப்படுத்திக்கொண்டிருக்கிறார். என் பணிப்பெண் ஒருவருக்கு ஷுகர் முந்நூறு நானூறு என்று ஆகி, உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் டாக்டர் பாஸ்கரனின் மருந்தை உட்கொண்டு மூன்றே மாதத்தில் சர்க்கரை சமநிலைக்கு வந்தது.

இத்தனைக்கும் இடையில் டாக்டர் பாஸ்கரனுக்கு ஒரு வருத்தம் உண்டு. ”எவ்வளவோ சிரமம் எடுத்துக்கொண்டு மருந்து தயாரித்துக் கொடுக்கிறேன். ஆனால் சரியாக அதை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்” என்றார். என்ன செய்வது? நல்வழியைக் காண்பிக்கத்தான் முடியும். அதை ஏற்க மாட்டேன் என்று சொல்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.

மீண்டும் சொல்கிறேன். உடல் மற்றும் மனநலப் பிரச்சினை இருந்தால் டாக்டர் பாஸ்கரனை அணுகுங்கள். அவர் வேலூரில் வசிக்கிறார் என்றாலும், வாரம் ஒருநாள் சென்னையும், மாதம் ஒருநாள் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் வருகிறார். பயன்படுத்திக் கொள்ளுங்கள். டாக்டர் பாஸ்கரனின் தொடர்பு எண்: 78260 57789