நாவல் அதிக பட்சம் அக்டோபர் இறுதிக்குள் உங்கள் கைகளில் கிடைக்கும். அச்சகத்தில் தாமதமானால் நவம்பர் ஆகலாம். ஆனால் நான் நாவலை பதிப்பகத்திடம் செப்டம்பரில் கொடுத்து விடுவேன். நாவல் Everyman’s Library Classics தரத்தில் இருக்கும். Cloth binding போடப்பட்டிருக்கும். இது ஒரு Collector’s Special Edition என்பதால் விலை அதிகமாகத்தான் இருக்கும். Paperback edition போடுவதாக இல்லை. தியாகராஜா: ஓர் இசைஞானியின் கதை என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால் அது பல குழப்பங்களை உண்டு பண்ணும். தியாகராஜா என்ற இந்த நாவல் ஓர் இசைக் கடவுளுக்கு நான் எழுதும் துதிப்பாடல் என்பதால் இதில் எந்தக் குழப்பமும் ஏற்படக் கூடாது என்று தலைப்பை மாற்றினேன்.
இந்த நாவலில் என் மொழி நடை மற்றும் இதுவரையிலான என் எழுத்தின் குணாம்சங்கள் அத்தனையும் மாறியிருக்கும். நான் எழுதும் கதைதான் என் மொழியையும் நடையையும் நிர்ணயிக்கிறது. அந்த வகையில் இந்த நாவலில் நீங்கள் காணப் போவது ஒரு புதிய சாருவை. பார்ப்போம். நாவலை ஒரு நாளில் நாற்பத்தெட்டு மணி நேரம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். சாட்சி நாவலில் கிடைக்கும்.
நாவலுக்கான இருபது முப்பது அட்டைப் படங்களை உருவாக்கி அனுப்பிக்கொண்டிருக்கிறார் நிர்குண். அதை எல்லாமே ஒரு கண்காட்சியாக வைக்கலாம் போல் இருக்கிறது. அதில் எனக்குப் பிடித்தது இந்த ஓவியம். நீங்கள் புத்தகமாக வாங்கும்போது இந்த அட்டை இல்லாமல் இருக்கலாம். இதை விட சிறந்த ஓவியத்தை அவர் உருவாக்கினால் இதை விட்டு விடுவேன்.
