நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் மாற்று சினிமாவிற்கான இணைய மாத இதழான பேசாமொழியின் 33வது இதழ் 5ஆம் தேதி வெளிவந்துவிட்டது. இந்த இதழில் காமிக்ஸ் பற்றிய ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் கட்டுரை மிக முக்கியமானது. பெண் இயக்குனர் ஹனா மெக்மல்பஃப் நேர்காணல், மொழியாக்க முயற்சியான ஜான் பெர்ஜரின் காணும் முறைகள் (தமிழில்: யுகேந்தர்) தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது வழங்கிய நிகழ்வு பற்றிய பதிவு (தினேஷ்) ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் தொடர்ச்சி, பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் (வருணன்), இலங்கை தமிழ் சினிமாவின் கதை உள்ளிட்ட தொடர்களும் வெளிவந்திருக்கிறது. நண்பர்கள் தவறாமல் படித்துவிட்டு தங்கள் கருத்துகளை பகிரவும்.