பிரபல பத்திரிகைகளில் பொதுவாக என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் தர மாட்டார்கள். ஆனால் சிம்பு அநிருத் பற்றிய கட்டுரையில் அந்த விபரம் இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்திருந்தன. ஆச்சரியமாக இருந்தது. இன்னொரு ஆச்சரியம், அந்த நூறு பேரில் ஒருவர் கூட என் எழுத்தைப் படித்தவர் இல்லை. தயவுசெய்து நம்புங்கள். ஒருவருக்குக் கூட என் எழுத்து பரிச்சயமாக இல்லை. நான் புனைகதைகள் மட்டும் அல்ல; கட்டுரைத் தொகுப்புகளே ஐம்பதுக்கு மேல் எழுதியிருப்பேன். அதெல்லாம் ஒருவருக்குத் தன் வாழ்வை மேலும் சிறப்பாக்கிக் கொள்ள வழி வகுப்பவை. தன்னுடைய வாழ்வை செழுமைப்படுத்திக் கொள்ளவாவது என் கட்டுரைத் தொகுப்புகளைப் படித்திருக்கலாம். கடிதம் எழுதியவர்களில் பலர் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், அறுபது வயதுக்கு மேல் ஆனவர்கள், இல்லத்தரசிகள், வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் என்று பலதரப்பட்டவர்கள். ஒருவர் கூட என் எழுத்தைப் படித்தது இல்லை. ஒரு பத்து பேர் டியர் மேடம் என்றும் எழுதியிருந்தார்கள்.
யோசித்துப் பார்த்தேன். பாரதியின் காலத்துக்குப் பிறகு, தினமணி ஏ.என். சிவராமனின் காலத்துக்குப் பிறகு இப்போதுதான் தினசரிகளில் கொஞ்சம் கனமான விஷயங்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தி இந்துவின் மூலம் அது சாத்தியமாகி இருக்கிறது. இன்னும் இவர்கள் செய்தித்தாள்களைத் தாண்டியும் எழுத்தாளர்களின் படைப்புகளை எப்போது பரிச்சயமாக்கிக் கொள்வார்கள் என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகள் ஆகும். புனைகதைகளை விடுங்கள். என் கட்டுரைகள் எந்த அளவுக்கு ஒருவருக்குப் பயன்படுகிறது என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு உதாரணம்.
தி இந்து குழுவினருக்கு ஒரு வேண்டுகோள். வாரத்தில் ஒருநாள் நாலு பக்கம் இலக்கியத்துக்கு ஒதுக்குங்கள். இலக்கியம் என்றுதான் சொல்லியிருக்கிறேன் நண்பர்களே, இலக்கியத்தின் Synonym காலச்சுவடு அல்ல. இலக்கியப் பரிச்சயம் இருந்திருந்தால் எல்லோருக்கும் எது கலை, எது கலகம், எது பொறுக்கித்தனம் என்ற வித்தியாசம் தெரிந்திருக்கும். ஆண்டாள் எழுதியது கலை; எமினம் எழுதியது கலகம், சிம்பு அநிருத் எழுதியிருப்பது பொறுக்கித்தனம். ஆங்கிலத்தில் லும்பன் என்பார்கள்.
Dear Charu,
Greetings and respects. Its been quite some time I met you and life on
my side has been very hectic with lot of travels and living outside
chennai. You have written about laura fabian and Nasy ajram earlier
and sincere thanks for writing about these singars again. If my memory
is correct, you wrote about nancy approx four years ago and laura
couple of years ago.
Six months before I was on a business trip to Paris and as usual, this
trip was also mostly airport, hotel, customer meeting and back to
airport. Luckily I had a day and went to louver again to get lost. The
customer hosted lunch for us and slowly he started asking about my
understanding of french etc…
I mentioned about Laura fabian music and this song… He was stumped
and didnt expect some one from a remote corner and mention about a
celebrity singer to this level. I finished off my discussion by saying
I am parroting what my “GURU” has written.
People like me are indebted to you for ever for holding our hand and
taking us to new heights and giving a different view point. Your books
has shaped our thinking….
Thank you Charu
Senthil Kumaran
டியர் செந்தில்,
அடுத்த முறை பாரிஸ் சென்றால் அங்கே உள்ள கத்தாகோம்ப் சென்று பாருங்கள். இந்தியர் யாரும் போகத் தயங்கும் இடம். பல ஆயிரக் கணக்கான, லட்சக் கணக்கான மனிதர்களின் எலும்புகள் பாதுகாக்கப்படும் மாபெரும் கல்லறைக் கூடம். சுற்றிப் பார்க்கவே அரை நாள் ஆகும். அது ஒரு மிகப் பெரிய அனுபவமாக இருக்கும்.
சாரு